செய்திகள்

தமிழகத்துக்கு மேலும் 13.16 லட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிகள்

சென்னை, ஏப்.4-

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதில், சுகாதாரம், உள்ளாட்சி, போலீசார் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு வயது வரம்பு இல்லாமல், தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இதற்காக, முதற்கட்டமாக மத்திய அரசிடமிருந்து, 39 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்தது. அதில், இதுவரை, 32 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசிடமிருந்து, நேற்று காலை, 2.14 லட்சம் டோஸ் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும், மாலையில், 11.02 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும் என மொத்தம் 13.16 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டு, தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *