செய்திகள்

தமிழகத்தில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை, ஏப்.26-

தமிழகத்தில் நேற்று 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நேற்று புதிதாக 33 ஆண்கள், 22 பெண்கள் என மொத்தம் 55 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 37 பேர் உள்பட 10 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 28 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்பட்டவில்லை.

மேலும், 12 வயதுக்குட்பட்ட 10 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 10 முதியவர்களுக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நீலகிரி, பெரம்பலூர், தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது.

தமிழகத்தில் நேற்றையை நிலவரப்படி 16 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து 39-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 27 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 221 பேரும், செங்கல்பட்டில் 43 பேரும் உள்பட 362 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.