செய்திகள்

தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் நாளை 17வது மெகா தடுப்பூசி முகாம்

சென்னை, ஜன.1-

தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் நாளை 17வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் 100 சதவீதம் அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில், தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 16 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இந்த முகாம்களில் சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 87 சதவீதத்தினருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 59 சதவீதத்தினருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 17-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறவுள்ளது.

சென்னையில் மட்டும் ஆயிரத்து 1600 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘மெகா தடுப்பூசி முகாம் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் சனிக்கிழமை (இன்று) புத்தாண்டு என்பதால் தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் வழக்கம்போல் சனிக்கிழமையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *