செய்திகள்

தமிழகத்தில் 38 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி; தர்மபுரியில் பா.ம.க. முன்னிலை

அண்ணாமலை, ஓ.பி.எஸ். பின்னடைவு

சென்னை, ஜூன் 4–

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

தர்மபுரி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலையில் இருக்கிறார்.

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 19–ந்தேதி தேர்தல் நடந்தது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி 39 மையங்களில் உள்ள 43 கட்டிடங்களில் இன்று நடைபெற்றது. முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு யந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கப்பட்டன.

39 மையங்களில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு அறை வீதம் 234 அறைகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.

ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் வீதம் சுமார் 3 ஆயிரத்து 300 மேஜைகளில் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தி.மு.க., கூட்டணி 38 தொகுதிகளிலும், அண்ணா தி.மு.க. கூட்டணி – 1, பா.ஜ.க. கூட்டணி 1 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

விருதுநகரில் அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரனும், தர்மபுரியில் பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க.வின் சவுமியாவும் முன்னிலை பெற்றுள்ளனர். மற்ற தொகுதிகள் அனைத்திலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.

தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

மதியம் 1 மணி நிலவரப்படி 39 நாடாளுமன்ற தொகுதியில் பெற்ற வாக்கு விவரம் வருமாறு:–

அரக்கோணம்

ஜெகத்ரட்சகன் (தி.மு.க.) – 64,331

ஏ.எல்.விஜயன் (அ.தி.மு.க.) – 29,899

பாலு (பாமக) – 22,857

அப்சியா நஸ்ரின் (நாம் தமிழர் கட்சி) – 10,137

ஆரணி

தரணி வேந்தன் (தி.மு.க.) – 66,773

கஜேந்திரன் (அ.தி.மு.க.) – 41,566

கணேஷ் குமார் (பாமக) – 34,401

கு.பாக்கியலட்சுமி (நாம் தமிழர்) – 9,492

மத்திய சென்னை

தயாநிதி மாறன் (தி.மு.க.) – 63,262

பார்த்த சாரதி (தே.மு.தி.க.) – 11,306

மனோஜ் பி செல்வம் (பா.ஜ.க.) – 30,434

இரா.கார்த்திகேயன் (நாம் தமிழர்) – 6,977

வட சென்னை

கலாநிதி வீராசாமி (தி.மு.க.) – 73,996

ராயபுரம் மனோ (அ.தி.மு.க.) – 22,260

பால் கனகராஜ் (பா.ஜ.க.) – 20,708

அமுதினி (நாம் தமிழர் கட்சி) – 14,854

தென் சென்னை

தமிழச்சி தங்க பாண்டியன் (தி.மு.க.) –1,13,167

ஜெ.ஜெயவர்த்தன் (அ.தி.மு.க.) –36,855

தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜ.க.) –71,084

தமிழ்செல்வி (நாம் தமிழர்) –17,189

சிதம்பரம்

திருமாவளவன் (விடுதலை சிறுத்தை) – 1,09,047

சந்திரகாசன் (அ.தி.மு.க.) – 93,936

பி.கார்த்தியாயினி (பா.ஜ.க.) – 37,223

ஜான்சி ராணி (நாம் தமிழர்) – 15,360

கடலூர்

விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்) – 1,79,302

சிவக்கொழுந்து (தேமுதிக) – 1,09,627

தங்கர் பச்சான் (பாமக) – 73,916

மணிவாசகன் (நாம் தமிழர் கட்சி) – 22,169

தருமபுரி

சவுமியா அன்புமணி (பா.ம.க.) – 1,43,858

மணி (தி.மு.க.) – 1,27,342

அசோகன் (அ.தி.மு.க.) – 99,451

கா.அபிநயா (நாம் தமிழர்) – 20,704

கோவை

கணபதி ராஜ்குமார் (தி.மு.க.) – 46,086

சிங்கை ராமச்சந்திரன் (அ.தி.மு.க.) – 20,289

அண்ணாமலை (பாஜக) – 33,898

கலாமணி ஜெகநாதன் (நாம் தமிழர்) – 6,203

திண்டுக்கல்

ஆர்.சச்சிதானந்தம் (மார்க்சிஸ்ட்) – 2,15,078

எம்.எம்.முபாரக் (எஸ்டிபிஐ) – 73,003

திலகபாமா (பாமக) – 33,051

கலைராஜன் துரைராஜன் (நாம் தமிழர்) – 31,371

ஈரோடு

பிரகாஷ் (தி.மு.க.) – 1,03,217

ஆற்றல் அசோக்குமார் (அ.தி.மு.க.) – 61,634

விஜயகுமார் (தமிழ் மாநில காங்கிரஸ்) – 13,093

மு.கார்மேகன் (நாம் தமிழர்) – 16,442

கள்ளக்குறிச்சி

மலையரசன் (தி.மு.க.) – 2,25,724

குமரகுரு (அ.தி.மு.க.) – 2,00,800

தேவதாஸ் (பா.ம.க.) – 29,943

ஆ.ஜெகதீசன் (நாம் தமிழர்) – 28,250

காஞ்சிபுரம்

செல்வம் (தி.மு.க.) – 1,93,740

ராஜசேகர் (அ.தி.மு.க.) – 1,19,003

ஜோதி வெங்கடேஷ் (பாமக) – 54,389

வி.சந்தோஷ்குமார் (நாம் தமிழர்) – 39,170

கன்னியாகுமரி

விஜய் வசந்த் (காங்கிரஸ்) – 89,025

பசிலியா நசரேத் (அ.தி.மு.க.) – 6,928

பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக) – 54,611

மரிய ஜெனிபர் (நாம் தமிழர்) – 7,449

கரூர்

ஜோதிமணி (காங்கிரஸ்) – 1,32,238

தங்கவேல் (அ.தி.மு.க.) – 99,928

வி.வி.செந்தில்நாதன் (பா.ஜ.க.) – 24,917

கருப்பையா (நாம் தமிழர்)– 23,663

கிருஷ்ணகிரி

கோபிநாத் (காங்கிரஸ்) – 69,773

வி.ஜெயப்பிரகாஷ் (அ.தி.மு.க.) – 45,365

நரசிம்மன் (பாஜக) – 33,893

வித்யா வீரப்பன் (நாம் தமிழர்) – 15,319

மதுரை

சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட்) – 1,59,151

பி.சரவணன் (அ.தி.மு.க.) – 80,844

ராம ஸ்ரீநிவாசன் (பாஜக) – 77,257

சத்யாதேவி (நாம் தமிழர்) – 34,943

மயிலாடுதுறை

சுதா ராமகிருஷ்ணன் (காங்கிரஸ்) – 2,07,552

பாபு (அ.தி.மு.க.) – 99,054

ஸ்டாலின் (பா.ம.க.) – 71,956

பி.காளியம்மாள் (நாம் தமிழர்) – 50,808

நாகை

வை.செல்வராஜ் (கம்யூனிஸ்ட்) – 1,44,417

சுர்ஜித் சங்கர் (அ.தி.மு.க.) – 78,237

எஸ்.ஜி.எம். ரமேஷ் (பாஜக) – 27,105

மு.கார்த்திகா (நாம் தமிழர்) – 40,905

நாமக்கல்

மாதேஷ்வரன் (கொ.ம.தே.) – 1,28,093

எஸ்.தமிழ்மணி (அ.தி.மு.க.) – 1,21,640

கே.பி.ராமலிங்கம் (பாஜக) – 26,362

நீலகிரி

ஆ.ராசா (தி.மு.க.). – 1,85,137

லோகேஷ் (அதிமுக) – 85,815

எல்.முருகன் (பாஜக) – 99,429

ஜெயகுமார் (நாம் தமிழர்) – 20,122

பெரம்பலூர்

அருண் நேரு (தி.மு.க.) – 1,99,023

சந்திரமோகன் (அதிமுக) – 73,127

பாரிவேந்தர் (ஐ.ஜே.கே) – 54,280

இரா. தேன்மொழி (நாம் தமிழர்) – 38,446

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *