செய்திகள்

தமிழகத்தில் 26-–வது மெகா முகாம்: 5.92 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை, மார்ச் 27-

தமிழகத்தில் நடைபெற்ற 26–-வது மெகா முகாமில் 5.92 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நேற்று நடைபெற்ற 26–-வது மெகா தடுப்பூசி முகாமில், காலக்கெடு முடிந்தும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 50 லட்சம் பேருக்கும், 2-–வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 1.34 கோடி பேர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடந்தது.

அதன்படி, நேற்று ஒரே நாளில் 5 லட்சத்து 92 ஆயிரத்து 8 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 779 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 4 லட்சத்து 1,731 பேர் 2-–வது தவணை தடுப்பூசியும், 25 ஆயிரத்து 498 பேர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர்.

இதுவரை 12 முதல் 14 வயதுக்குட்பட்ட 11 லட்சத்து 92 ஆயிரத்து 322 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட 92.19 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 76.12 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. மேலும், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 85.71 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 62.18 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும் செலுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை நடந்த 26 மெகா தடுப்பூசி முகாம்களின் மூலம் 3 கோடியே 95 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.