செய்திகள்

தமிழகத்தில் 2வது நாளாக உச்சத்தை தொட்ட மின்சார பயன்பாடு: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை, ஏப். 30–

தமிழகத்தில் 2 நாளில் 2 முறை மின்சார பயன்பாடு உச்சத்தை தொட்டுள்ளதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. மேலும் நாட்டின் பல மாநிலங்களில் மின் தடை நிலவி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 2 முறை மின்சார பயன்பாடு உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி கடந்த 28–ந்தேதி தமிழகத்தில் 17 ஆயிரத்து 370 மெகா வாட் மின்சார ஒரே நாளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

இந்நிலையில் 2வது முறையாக நேற்றும் தமிழகத்தில் மின்சார பயன்பாடு உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி 29ம் தேதி 17,563 மெகா வாட் மின்சார பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதமே மின்சார பயன்பாடு உச்சத்தை தொட்டு வரும் நிலையில் மே மாதத்தில் வெப்பம் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மின்சார பயன்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.