சென்னை, டிச. 14–
தமிழகத்தில் இன்று முதல் 18–ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 18–ந்தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மதிமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யக்கூடும்.
இன்றும், நாளையும் மத்திய–கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூர் – 30 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
நீடாமங்கலம் – 16 செ.மீ., திருமானூர் – 15 செ.மீ., பில்லிமலை எஸ்டேட், ஆதார் எஸ்டேட், திருவையாறு தலா 10 செ.மீ., கொடநாடு, பர்லியார் தலா 9 செ.மீ., மணம்பூண்டி, புடலூர் தலா 8 செ.மீ., முகையூர், கேதார், அறந்தாங்கி, கெட்டி, கோவை தலா 7 செ.மீ., தியாகதுர்கம், பெரம்பலூர், திருக்காட்டுப்பள்ளி, தி்ண்டுக்கல், கோத்தகிரி, மணலூர்பேட்டை, மைலம்பட்டி தலா 6 செ.மீ., கள்ளக்குறிச்சி, அய்யம்பேட்டை, அரியலூர், விருகாவூர், குருங்குளம், உதகமண்டலம், கிண்ணக்கொரை, திருக்கோவிலூர், நந்தியாறு, விழுப்புரம், கலயநல்லூர், வீரகனூர், சமயபுரம் தலா 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.