செய்திகள்

தமிழகத்தில் 17 ந்தேதி வரை இடி மழை: வானிலை மையம்

சென்னை, ஏப். 13–

தமிழகத்தில் 17ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் ,தென் தமிழகம் ,வட உள் மாவட்டங்களைப் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் கன்னியாகுமரி ,திருநெல்வேலி ,தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி, மின்னல் காற்றுடன் கூடிய கனமழை நாளை பெய்யக்கூடும் என்றும் தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

17 ந்தேதி வரை மழை

15ஆம் தேதி நீலகிரி ,கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், 16 ந்தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

17-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸில் ஒட்டி இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *