செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அனல் அடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை,ஜூன்.18–

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்றும், நாளையும் அனல் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் கூறியுள்ளதாவது:–

தென்மேற்கு பருவ மழை துவங்கிய சில நாட்களிலேயே நின்று விட்டது. அதனால், மாநிலம் முழுவதும் அனல் காற்று வீசுகிறது. இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் அனல் காற்று வீசும். திருவள்ளூர், வேலுார், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம், நாகப்பட்டினம், அரியலுார், பெரம்பலுார், கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அனல் அடிக்கும்.

மதுரை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு, 4 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக வெப்பநிலை பதிவாகும். அதேபோல், ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.

இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *