சென்னை, டிச. 9–
தமிழகத்தில் 11,609 மின்மாற்றிகள் மாற்றப்பட்டுள்ள என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “சென்னையில் 7 மின் கோட்டங்களில் மட்டுமே இன்னும் மேல்நிலை மின்சாரக் கம்பி வடங்கள் இருக்கின்றன. இவற்றை புதைவிட கம்பிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் அம்பத்தூர் தொகுதியும் உள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து 150 மின் மாற்றிகளை மாற்றுவது குறித்து அண்ணா தி.மு.க. உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் கேட்ட கேள்விக்கு, பதிலளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில,தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 509 மின்மாற்றிகள் முழுமையாக மாற்றப்பட்டுள்ளன. மதுரை திருமங்கலம் தொகுதியிலும் புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கூறினார்.
மேலும் திருப்போரூர் கோவலத்தில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.