செய்திகள்

தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, நவ. 30–

தமிழகத்தில் 1000 புதிய பஸ்கள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாநகர போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரத்துக் கழகம் தவிர்த்து இதர கோட்டங்களுக்கு சேர்த்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பஸ் ரூ.42 லட்சம் என்று மதிப்பீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டசபையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்போது புதிய பஸ்கள் வாங்குவதற்கான அரசாணையை போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் கோபால் வெளியிட்டுள்ளார். கும்பகோணம் கோட்டத்திற்கு 250 பஸ்கள், மதுரை கோட்டத்திற்கு 220 பஸ்கள், விழுப்புரம் கோட்டத்திற்கு 180 பஸ்கள், கோவை கோட்டத்திற்கு 120 பஸ்கள், நெல்லை கோட்டத்திற்கு 130 பஸ்கள், சேலம் கோட்டத்திற்கு 100 பஸ்கள் என்று மொத்தமாக தமிழகத்தில் 1000 புதிய பஸ்கள் வாங்க ரூ. 420 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *