செய்திகள்

தமிழகத்தில் மரக்கன்று நட்டு பசுமை போர்வையை உருவாக்க அரசு தீவிர ஏற்பாடுகள்

சென்னை, பிப். 12

தமிழகத்தில் மரக்கன்று நட்டு பசுமை போர்வையை உருவாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெருமிதத்துடன் கூறினார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது வேலூர் தொகுதி உறுப்பினர் கார்த்திகேயன் கேள்வி ஒன்றை எழுப்பினார். வேலூர் தொகுதிக்குட்பட்ட சத்துவாச்சாரி, பெருமுகை, சலவன் பேட்டை ஆகிய மலைப்பகுதிகளில் மரக்கன்றுகள் நட அரசு ஆவன செய்யுமா? என்று கேட்டார்.

இதற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளி்க்கையில், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டம் மற்றும் மாபெரும் மரம் நடுவு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் வேலூர் தொகுதிக்குட்பட்ட சத்துவாச்சாரி, பெருமுகை, சலவன் பேட்டை ஆகிய மலைப்பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவு செய்யப்பட்டுள்ளது.

சத்துவாச்சாரி, பெருமுகை ஆகிய மலை பகுதிகளில் வேலூர் கோட்டமலை காப்பு காடும், சலவன் பேட்டை பகுதியானது வேலூர் கோட்டமலை மற்றும் காலமதி காப்பு காட்டினை ஒட்டிய பகுதியாகும். கோட்டமலையை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் சத்துவாச்சாரி அருகில் ரூ.10 லட்சம் மதிப்பில் 1000 செடிகளும், ரூ.11 லட்சத்தில் 6 தடுப்பணைகளும், ரூ.6 லட்சத்தில் கசிவுநீர் குட்டைகளும் 2012 13ம் ஆண்டில் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2013 14ம் ஆண்டில் பெருமளவில் மர வளர்க்கும் திட்டத்தின்கீழ் சத்துவாச்சாரி பகுதி அருகே 500 மரக்கன்றுகளும், நபார்டு திட்டத்தின்கீழ் சலவன் பேட்டை பகுதி அருகே பாலமதி காப்பு காட்டில் 500 மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 2 தடுப்பணைகள், கசிவுநீர் குட்டைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் பசுமை போர்வையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜெயலலிதா பிறந்தநாள் அன்று மரம் நடும் இயக்கத்தை ஒரு புரட்சி திட்டமாக செயல்படுத்தி வருகிறோம். அனைத்து பகுதியிலும் 3.75 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது என்றார்.

அதனை தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி துணை கேள்வி ஒன்றை எழுப்பினார். தமிழகத்தில் பல பகுதிகளில் வனவிலங்குகளால் பயிர்கள் அழிக்கப்படுகின்றன. பயிர்களை அழிக்கும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி எத்தனை காட்டுப்பன்றிகள் கொல்லப்பட்டன. சின்னதம்பி யானையின் நிலை என்ன? என்ற கேள்வி எழுப்பினார்.

தினசரி கதாநாயகனா சின்னதம்பி யானை உலவி வருகிறது. சின்னதம்பி யானை தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட இருக்கிறது.அதன்படியில் வனத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

அதபோல் தி.மு.க. கொறடா சக்கரபாணி் துணை கேள்வி எழுப்பி நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகளை நட அரசு நடவடிக்கை எடுக்குமா? என்றார்.

அதற்கு திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளி்க்கையில், முதல்வர், இந்த விஷயத்தில் மிக தௌிவாக தேசிய நெடுஞ்சாலைகளில் மரம் நட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும் என அறிவுறுத்தியதன் அடிப்படையில் அவை நடைபெற்று வருகின்றன.

அதேபோல் மற்ற பகுதிகளில் பனை, தேக்கு, அலையாத்தி போன்ற மரங்களை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 33% பசுமை போர்வையுடன் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *