செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா

சென்னை, மே 27–-

தமிழகத்தில் நேற்று புதிதாக 59 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–-

தமிழகத்தில் நேற்று புதிதாக 34 ஆண்கள், 25 பெண்கள் என மொத்தம் 59 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 33 பேர், செங்கல்பட்டில் 15 பேர் உள்பட 6 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 32 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்படவில்லை.

மேலும், 12 வயதுக்கு உட்பட்ட 5 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 12 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அரியலூர், திண்டுக்கல் உள்பட 13 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது. இந்த மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பும் இல்லை, சிகிச்சையிலும் ஒருவர் கூட இல்லை.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 19 பேர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 70–-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. தற்போது தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 203 பேரும், செங்கல்பட்டில் 85 பேரும் உள்பட 387 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.