செய்திகள்

தமிழகத்தில் பரவலாக இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை, மே 17–
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில், பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், திண்டுக்கல் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மழை பெய்யும் போது 30 முதல் 40 கி.மீ. வரை காற்று வீசக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு அனல் காற்று வீச வாய்ப்பில்லை.
கடந்த 24 மணி நேரத்தில் பேச்சிப்பாறை 4 செ.மீ., சித்தேரியில் 3 செ.மீ. மழையும் பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *