செய்திகள்

தமிழகத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

சென்னை, மார்ச்.15-

தமிழகத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதுதொடர்பாக கருவூலம் மற்றும் கணக்குத்துறை அதிகாரிகள் மற்றும் கணக்கு தணிக்கை அதிகாரிகளுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசு அறிவித்தபடி, அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 ஆக ஜனவரி 1ந்தேதி முதல் முன்தேதியிட்டு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் கிடைக்கும் நிலுவைத்தொகை, மார்ச் மாத ஊதியத்துக்கு முன்னதாக அவர்களுக்கு அளிக்கப்படக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *