செய்திகள்

தமிழகத்தில் நேற்று 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை, ஏப்.28-

தமிழகத்தில் நேற்று 77 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னை ஐ.ஐ.டி.யில் மட்டும் 33 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா தொற்று குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நேற்று புதிதாக 20 ஆயிரத்து 375 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 52 பேரும், பெண்கள் 25 பேரும் உள்பட 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 59 பேர் உள்பட 9 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 6 பேர், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 5 பேர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 11 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகியுள்ளது. இதுவரை 34 லட்சத்து 53 ஆயிரத்து 756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்படைந்த 77 பேரில் சென்னை ஐ.ஐ.டி யில் மட்டும் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தொடர்ந்து 41-வது நாளாக நேற்று கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.

மேலும் நேற்றைய நிலவரப்படி 447 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 19 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

34 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.