செய்திகள்

தமிழகத்தில் நேற்று 4,300 மையங்களில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை, மார்ச்.27-

தமிழகத்தில் 62-வது நாளாக நேற்று 4,301 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1 லட்சத்து 8 ஆயிரத்து 612 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

அந்தவகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 40 ஆயிரத்து 917 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 39 ஆயிரத்து 743 முதியவர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்கள் 10 ஆயிரத்து 766 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 17 ஆயிரத்து 186 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 26 லட்சத்து 48 ஆயிரத்து 9 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *