செய்திகள்

தமிழகத்தில் நேற்று 30 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

சென்னை, ஏப்.18-

தமிழகத்தில் நேற்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 16 ஆண்கள், 14 பெண்கள் என மொத்தம் 30 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 19 பேர் உள்பட 9 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 29 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்பட்டவில்லை.

மேலும், 12 வயதுக்குட்பட்ட 1 குழந்தைக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 6 முதியவர்களுக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், தென்காசி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட 15 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது.

தமிழகத்தில் நேற்றையை நிலவரப்படி 10 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 24 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் 231 பேர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.