செய்திகள்

தமிழகத்தில் நேற்று 1,819 பேருக்கு கொரோனா

சென்னை, ஜூலை.25-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 40 ஆயிரத்து 897 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,026 ஆண்கள், 793 பெண்கள் என மொத்தம் 1,819 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 175 பேரும், ஈரோட்டில் 132 பேரும், சேலத்தில் 107 பேரும், சென்னையில் 127 பேரும், செங்கல்பட்டில் 95 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 55 லட்சத்து 22 ஆயிரத்து 588 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 25 லட்சத்து 46 ஆயிரத்து 689 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 22 பேரும், தனியார் மருத்துவமனையில் 5 பேரும் என 27 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 33 ஆயிரத்து 889 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2,583 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 24 லட்சத்து 88 ஆயிரத்து 775 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 26 ஆயிரத்து 158 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் 39 ஆயிரத்து 293 ஆக்சிஜன் படுக்கைகள், 25 ஆயிரத்து 595 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 7 ஆயிரத்து 742 ஐ.சி.யு படுக்கைகள் என மொத்தம் 72 ஆயிரத்து 630 படுக்கைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *