செய்திகள்

தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 2,194ஆக அதிகரிப்பு

சென்னை, மார்ச்.29-

தமிழகத்தில் புதிதாக 2,194 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த 5 மாவட்டங்களில் மட்டும் நாள் ஒன்றுக்கு புதிதாக 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தாக்கம் கண்டறியப்படுகிறது.

இதில் சென்னையில் மட்டும் நேற்று 833 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தில் நேற்று புதிதாக 84 ஆயிரத்து 927 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 2 ஆயிரத்து 194 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 90 லட்சத்து 25 ஆயிரத்து 554 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 79 ஆயிரத்து 473 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 7 பேர், தனியார் மருத்துவமனையில் 4 பேர் என 11 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்து 670 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,270 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *