செய்திகள்

தமிழகத்தில் தொற்றுப் பரவல் 2 நாட்களாக குறைந்துள்ளது: சுகாதாரத் துறைச் செயலாளர் தகவல்

சென்னை, ஏப். 27–

கடந்த இரண்டு நாள்களாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் வேகம் சற்று குறைந்துள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் நிலவரம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத்தால் கொரோனா பரவலின் வேகம், கடந்த இரண்டு நாள்களாக சற்று குறைந்திருக்கிறது. முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம். அடுத்த சில நாள்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக் கூடாது.

பாதிப்பு சற்று குறைவு

அதுதவிர, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக, மிகத் தீவிரமாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. பொது நிகழ்ச்சிகளில் மக்கள் கலந்துகொள்வதைக் குறைத்துக் கொள்வது, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.

இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை விட, இன்னும் தீவிரமாகக் கட்டுப்பாட்டைப் பின்பற்றினால், கொரோனா பரவல் குறையும் நிலையை எட்டலாம். மேலும் தமிழகத்தில் நாள்தோறும் ஒரு லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *