சென்னை, டிச. 30–
தமிழகத்தில் டிசம்பர் 5–ந்தேதி அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கிழக்கு திசை காற்றின் மாறுபாட்டால் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
2–ந்தேதி முதல் 4–ந்தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள், வடதமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 5–ந்தேதி வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
கடந்த 24 மணி நேரத்தில் ஊத்து – 9 செ.மீ., ஸ்ரீவில்லிபுத்தூர் – 7 செ.மீ., கீழ் கோத்தகிரி எஸ்டேட், சிவகிரி, மாஞ்சோலை தலா 6 செ.மீ., பர்லியார், கீழ் கோதையாறு, அடையாமடை, கருப்பாநதி அணை தலா 5 செ.மீ., கடம்பூர், பில்லூர் அணை, அழகரை எஸ்டேட், கயத்தாறு, பாபநாசம், குலசேகரப்பட்டினம், கோழிப்போர்விளை தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.