செய்திகள்

தமிழகத்தில் சிறப்பு ரெயில்கள் 15ம் தேதி வரை ரத்து

சென்னை, செப்.1–

தமிழகத்தில் முக்கிய நகரங்கள் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் இம்மாதம் 15ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சிறப்பு ரெயில்கள் நேற்று வரை ரத்து செய்யப்பட்டிருந்தன. தமிழக அரசு கேட்டுக் கொண்டதால் முக்கிய நரங்கள் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் ரத்து இம்மாதம் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரலில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் ராஜ்தானி சூப்பர் பாஸ்ட் ரெயில் மறு அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து இயக்கப்படும்.

ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரெயில்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் முழு கட்டணத்தையும் டிக்கெட் கவுண்டர்களில் 6 மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *