செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்தது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்தது

4 லட்சத்து 47 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

சென்னை, செப்.14-

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 3,410 ஆண்கள், 2,283 பெண்கள் என மொத்தம் 5,693 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 7 பேர் அடங்குவர்

அதிகபட்சமாக சென்னையில் 994 பேரும், கோவையில் 490 பேரும், சேலத்தில் 309 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 2 ஆயிரத்து 759 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.

அந்த வகையில் இந்த பட்டியலில் 3 லட்சத்து 3 ஆயிரத்து 201 ஆண்களும், ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 529 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 850 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 65 ஆயிரத்து 692 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இதுவரை சென்னையில் 1 லட்சத்து 35,215 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 47 ஆயித்து 366 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 1,228 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 5,717 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். தற்போதைய நிலையில், சென்னையில் 10,393 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 47,012 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 35 பேரும், தனியார் மருத்துவமனையில் 39 பேரும் என 74 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் 8 ஆயிரத்து 381 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 976 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 922 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 888 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 218 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 490 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மேலும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 65 அரசு மற்றும் 103 தனியார் நிறுவனம் என மொத்தம் 168 நிறுவனத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று 82 ஆயிரத்து 387 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 57 லட்சத்து ஆயிரத்து 399 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 584 செங்கல்பட்டில் 30 ஆயிரத்து 366 திருவள்ளூரில் 28 ஆயிரத்து 325, கோவையில் 22 ஆயிரத்து 156 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *