செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதித்த பெற்றோர்களின் குழந்தைகளை பாதுகாக்க மையம்

அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

நெல்லை, மே 18–

கொரோனா பாதித்த பெற்றோரின், குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலியில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் செயல்படத் தொடங்கியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின், குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருப்பதாக, குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை அமைத்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த மையம் தமிழகத்தில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கொரோனாவால் பாதிக்கப்படும் பெற்றோர்களின் தொற்று பாதிக்கப்படாத குழந்தைகளை இந்த மையத்தில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார். இந்த மையத்தில் குழந்தைகளைச் சேர்க்க சைல்டு லைன் 1098, தொலைபேசி எண் 0462 255 1953, வாட்ஸ் அப் எண்99447 46791-ல் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *