செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

நேற்று 6,993 பேர் பாதிப்பு; 5,723 பேர் டிஸ்சார்ஜ்

சென்னை, ஜூலை.28-

தமிழகத்தில் ஒரே நாளில் 61 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று புதிதாக 6,993 பேர் தொற்று ஏற்பட்டது. ஒரே நாளில் 5,723 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 61 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4,162 ஆண்கள், 2,831 பெண்கள் என 6,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், வெளிநாடுகளில் இருந்து வந்த 3 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 34 பேரும் அடங்குவர்.

அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 37 மாவட்டங்களிலும் நேற்று தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன. அதிகபட்சமாக சென்னையில் 1,138 பேரும், திருவள்ளூரில் 474 பேரும், செங்கல்பட்டில் 448 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 716 பேர் ஆகும்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 50 பேரும், தனியார் மருத்துவமனையில் 27 பேரும் என 77 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,571 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 2,032 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 723 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதுவரையில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 249 பேர் குணம் அடைந்து உள்ளனர். இது 73.5 சதவிகிதம் ஆகும். சிகிச்சையில் 54 ஆயிரத்து 896 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் 58 அரசு நிறுவனம், 59 தனியார் நிறுவனம் என மொத்தம் 117 நிறுவனங்களில் பரிசோதனைகள் நடைபெறுகிறது. இதுவரை 23 லட்சத்து 24 ஆயிரத்து 80 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 24 லட்சத்து 14 ஆயிரத்து 713 ஆகும்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 11,042 பேர், 13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 1 லட்சத்து 82 ஆயிரத்து 286 பேர், 60 வயதுக்கு மேற்பட்டோர் 27 ஆயிரத்து 388 பேர் அடங்குவர். இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் எண்ணிக்கை 5,274 பேர் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *