செய்திகள்

தமிழகத்தில் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி : பல்லடம் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேச்சு

Makkal Kural Official

பல்லடம், பிப்.28-–

பிரதமர் மோடி, பல்லடத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது, ‘இந்தியா’ கூட்டணியால் மக்களுக்கு பயன் கிடைக்காது என்று பேசினார்.

தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பயணம் மேற்கொண்ட அவர், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று தனது பயணத்தை நிறைவு செய்தார்.

இதையொட்டி, பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். திறந்த வெளி காரில் விழா மேடைக்கு வந்த அவருக்கு அங்கு கூடியிருந்த பாரதீய ஜனதா தொண்டர்கள் பூக்கள் தூவி வரவேற்றனர்.

பொதுக்கூட்ட மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு நீலகிரி மாவட்ட மலைவாழ் மக்களின் பாரம்பரிய அடையாளமான கையினால் நெசவு செய்யப்பட்ட துண்டை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அணிவித்தார். ஜல்லிக்கட்டு தடையை நீக்கி தமிழர்களின் உரிமையை காத்ததற்காக ஜல்லிக்கட்டு காளை வெண்கல சிலையை தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை வழங்கினார்.

65 கிலோ மஞ்சள் மாலை

கொங்கு பகுதியில் விளையும் மஞ்சளுக்கு புவிசார் குறியீடு பெற்று தந்ததற்காக 65 கிலோ எடையில் உருவாக்கப்பட்ட மஞ்சள் மாலையை அண்ணாமலை மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு அணிவித்தார்கள். அதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் தொடங்கியது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அனைவரையும் வரவேற்றார். பின்னர், தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.

தொடர்ந்து, பிரதமர் மோடி ‘வணக்கம் நண்பர்களே’ என்று தமிழில் உரையை தொடங்கி பேசியதாவது:–

இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்க்கும்போது காவிகடல் கண்டதைப் போல் உள்ளது. டெல்லியின் ஏ.சி. அறையில் இருந்துகொண்டு சிலர் இந்தியா பிளவுபடுவதை பார்க்க விரும்புகிறார்கள். தேசத்தை துண்டாடவும் முயற்சி செய்கிறார்கள்.

இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்வதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த முறை தேசத்தை கட்டமைப்பதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும். 2024-ம் ஆண்டு அமைய உள்ளஆட்சியில், தமிழகம் துடிப்பான மாநிலமாக உருவெடுக்கும். தமிழகத்தில் இந்த 2024-ம் ஆண்டில் பாஜக பற்றிதான் அதிகம் பேசப்படுகிறது. புதிய வரலாற்றை தமிழகம் படைக்கும். ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவடைந்து இருக்கிறது. இதற்கு மக்களிடம் பேராதரவு கிடைத்து இருக்கிறது. தமிழக மக்கள் இந்த யாத்திரைக்கு மிகப்பெரிய ஆதரவு அளித்தனர். இந்த யாத்திரையின் மூலம் பாரதீய ஜனதாவுக்கு மக்களுடைய ஆதரவு பெருகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் அரசியல் திருப்புமுனை ஏற்படும். இதற்காக அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகம் என்னுடைய

இதயத்தின் தொடர்பில்…

என்னை பொறுத்த அளவில் தமிழ் மொழி, கலாசாரமும் முக்கியமானது. தமிழகத்துடனான எனது தொடர்பு அரசியல் ரீதியானது அல்ல. அது என்னுடைய இதயத்துடன் தொடர்புடையது. மிகவும் பழமையானது. தமிழகத்தின் மண் எப்போதும் எனக்கு உண்மையான அன்பை தந்திருக்கிறது. 33 ஆண்டுகளுக்கு முன்பு 1991-ம் ஆண்டு ஒற்றுமை யாத்திரையை தொடங்கினேன். இதன் தொடக்க நிகழ்ச்சி, தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரியில்தான் நடந்தது.

தமிழகத்தை கொள்ளையடித்த வர்கள் பாரதீய ஜனதாவுக்கு பெருகிவரும் ஆதரவை பார்த்து பயந்து கொண்டிருக்கிறார்கள். பொய் சொல்லி மக்களிடையே பிரிவினையை தூண்டி, சண்டை மூட்டிவிட்டு தங்களுடைய பதவியை காப்பாற்றிக்கொள்ள நினைக்கிறார்கள். இவர்களது கபட நாடகம் தற்போது வெளியே வந்துவிட்டது. அவர்களது ஊழல்கள் வெளியே வந்து கொண்டிருக்கின்றன. பா.ஜ.க. மீது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது. மத்தியில் இருக்கும் பாரதீய ஜனதா அரசு, தமிழகத்தின் வளர்ச்சிக்கு எப்போதும் உதவிக்கரமாக இருந்து வருகிறது. 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இருந்த மத்திய காங்கிரஸ் அரசு, தமிழகத்துக்கு நிதி ஒதுக்கியதில் பாரபட்சம் காட்டி யது. அவர்கள் ஒதுக்கிய நிதிவைவிட இப்போது பாரதீய ஜனதா அரசு தமிழகத்திற்கு 3 மடங்கு அதிகமாக ஒதுக்கியுள்ளது.

மோடி எதைச் செய்தாலும், அது அனைவருக்குமானது. ஏழைகளை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு வந்திருக்கிறோம். அதனால், ஏழைகளின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது. தமிழகத்தில் மூன்றரை கோடி மக்களுக்கு இலவசமாக அரிசி கொடுக்கிறோம். 40 லட்சம் பெண்களுக்கு இலவசமாக கியாஸ் சிலிண்டர் இணைப்பு கொடுத்துள்ளோம். பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் வீடு கட்டிக் கொடுத்துள்ளோம்.

ஜவுளி தொழிலுக்காக ரூ.20 ஆயிரம் கோடியில் விருதுநகரில் ஜவுளி பூங்கா கொண்டு வந்துள்ளோம். இதன்மூலம் ரூ.2 லட்சம் கோடிக்கு வருவாய் ஈட்டும் நிலையை எட்டியுள்ளோம். தொழில் முனைவோருக்கு ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டு வளர்ச்சிக்கு மோடியின் உத்தரவாதம் என்றால், அது தமிழக வளர்ச்சியையும் சேர்த்துதான். இதுதான் மோடி உத்தரவாதம். இது இன்னும் பல ஆண்டுகள் தொடரும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா…

தமிழக வருகையின்போது, மறைந்த முதல்வர் எம்ஜிஆர் நினைவுக்கு வந்தார். மக்களுக்கு தரமான கல்வி, சுகாதாரத்தை கொடுத்த அவரை இளைஞர்கள், பெண்கள் மிகப்பெரிய அளவில் மதித்தனர். இப்போதும் எம்ஜிஆரை ஒப்பற்ற தலைவர் என போற்றி புகழ்கின்றனர். அவர் குடும்ப அரசியல் காரணமாக ஆட்சிக்கு வந்தவர் அல்ல. எம்ஜிஆர் போலவே ஆட்சியை தந்தவர் ஜெயலலிதா. அவர் தன் வாழ்நாள் முழுவதையும் பொது நலனுக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் கொடுத்தார். அவருடன் நெருங்கி பணியாற்றி உள்ளேன். அவருக்கு மீண்டும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

‘இந்தியா’ கூட்டணியில் உள்ளவர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதுவுமே செய்யமாட்டார்கள். மக்களுக்கு எந்த பயனும் கிடைக்காது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக நான் பணியாற்றி வருகிறேன். இதனால், `இந்தியா’ கூட்டணி கூட்டம் அச்சத்தில் இருக்கிறது. இந்தியா கூட்டணி ஜெயிக்கா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *