செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, நவ.25–

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-–

கேரளா கடலோரப்பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று (25–ந் தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

26–ந் தேதி முதல் 29–ந் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 30 – -31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24- – 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு வருமாறு:–

தண்டரம்பேட்டை – 5 செ.மீ., செங்கம் – 3 செ.மீ., மகாபலிபுரம், திருவாலங்காடு தலா 2 செ.மீ., மூங்கில்துறை, நாட்றம்பள்ளி, ராயக்கோட்டை, சூளகிரி, திருவண்ணாமலை, மாரண்டஹள்ளி, அரக்கோணம், அழகரை எஸ்டேட், ஓசூர் தலா 1 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *