செய்திகள்

தமிழகத்திற்கு அகதிகளாக வர முயன்ற 14 இலங்கை தமிழர்கள் கைது

இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

கொழும்பு, மே 4–

தமிழகத்திற்கு அகதிகளாக வர முயன்ற 14 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் இலங்கையிலிருந்து தமிழர்கள் அவ்வப்போது, படகு மூலம் தப்பி தமிழகத்துக்கு அகதிகளாக வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் இருந்து தமிழகம் வர முயன்ற 14 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னார் பேசாலைப் பகுதி வழியாக வர முயன்றவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 14 பேரில், 5 பெண்களும், 5 சிறுவர்களும் அடங்குவர். இதனையடுத்து 14 தமிழர்களையும் மன்னார் போலீசாரிடம் இலங்கை கடற்படை ஒப்படைக்க உள்ளனர்.

கைது செய்யப்பட்டதில் 4 பேர் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், மற்றவர்களும் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.