நாடும் நடப்பும்

தமிழகத்தின் நலன் காக்க வெற்றி வியூகம்: சபாஷ் எடப்பாடி, பன்னீர்செல்வம் ‘டீம்’

மத்திய மாநில உறவுகளில் புது அத்தியாயம்

* மதுரை, கன்னியாகுமரியில் பிரதமரே வந்து பிரச்சாரம்

* கிராம வளர்ச்சிகளைக் கண்டு மத்திய அமைச்சர்கள் பிரமிப்பு

‘இரட்டை இலை’ அலை, திணறுகிறது தி.மு.க.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை பொற்கால ஆட்சி என வர்ணிப்பது அரசியல் வாய்ஜால வார்த்தை மட்டும் இல்லை , அது நிதர்சனமான உண்மை.. அவரது ஆட்சிக் காலம் ஏப்ரல் 13, 1954 முதல் மார்ச் 15, 1962 வரையாகும்!

பிறகு பிப்.13, 1967 வரையும் காங்கிரஸ் ஆட்சியே தமிழகத்தில் இருந்தது, ஆனால் பிறகு முதல்வர் பதவியில் இருந்தது பக்தவச்சலமாவார்!

அதுவரை மத்தியில் நிரந்தர தன்மையுடன் வலுவான ஆட்சியை தந்து கொண்டு இருந்தது பிரதமர் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சியாகும்.

ஆக மத்தியிலும் காங்கிரஸ், தமிழகத்தில் காமராஜர் முதல்வராக பொறுப்பில் இருந்ததுடன் அவரே தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்.

காமராஜரின் நல்லாட்சி அவரது சீரிய சிந்தனைகளால் நடந்தது என்பதில் சந்தேகமே இல்லை. கூடவே மத்திய அரசுடன் இருந்த நெருக்கம் தமிழக வளர்ச்சிக்கு உதவியதும் உண்மை.

பின்னர் தி.மு.க. மார்ச் 6, 1967–ல் ஆட்சிப் பொறுப்பில் அமர இருந்த காலம் வரை தமிழகத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட கட்சியே மத்திய மந்திரி சபையை உள்ளடக்கியிருந்தது.

முதல்வர் அண்ணாவின் மரணத்தால் முதல்வர் பதவியை பிடித்துவிட்ட கருணாநிதி தனது திமுக கட்சி தொண்டர்கள் நம்பிக்கையைப் பெற மத்திய அரசுடன் மோதல் அரசியலை கட்டவிழ்த்து விட்டார்.

ஒன்றாக குரல் கொடுத்து பெற்ற சுதந்திரம்

நாடே ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே நாட்டின் விடுதலையைப் பெற முடியும்! அதை உணர்ந்தே நாட்டில் எல்லாப் பிரதேசங்களும் மொழி, இன, மத வேற்றுமைகளை மறந்து ஒன்றாக இணைந்து போராடி பெறமுடிந்தது தான் நமது சுதந்திரம்.

அதே ஒற்றுமையை மத்திய அரசிடம் முன்வைத்து மாநில வளர்ச்சிகளுக்கு உதவிகள் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் வரத்தான் செய்யும்.

காமராஜர் தமிழகத்திற்கு பல தொழிற்சாலைகளை கொண்டு வந்தார். அதற்கு அவருக்கு உதவியாக இருந்தது அவரது ஆலோசனைகளை ஏற்கத் தயாராக இருந்த அவரது கட்சியின் தேசிய தலைமை!

ஆனால் நாடெங்கும் ஒரே வளர்ச்சி திட்டம் என்பது சாத்தியமே கிடையாது. அதையும் உணர்ந்தது தமிழகம்.

காமராஜர் பள்ளிகள், கல்லூரிகள், அணைகள், நிலக்கரிச் சுரங்கம், BHEL அதாவது பெல் தொழிற்சாலைகளை கொண்டு வந்தவர் தான் என்றாலும் மாநில உரிமைகளை நிலை நாட்ட முடியுமா? என்று கேள்விக்குறி இருந்த காலகட்டம் உருவாகிக் கொண்டிருந்தது.

பசிக்கும் பிள்ளைக்கு சற்றே அதிகமாக உணவை கொடுக்கும் தாயின் மனநிலையோடு அணுகப்பட்ட பல்வேறு முடிவுகள் பல சமயங்களில் மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கும் அம்சம் இருந்தால் அதை உரிமையோடு கோரும் மாநில சுயாட்சியும் தேவைப்படுகிறது.

மாநில சுயாட்சியும் அவசியம்

அன்று காமராஜர் ஆட்சியில் தமிழகம் பல்வேறு வளர்ச்சிகளை கண்டாலும் அந்த வளர்ச்சியின் பலனை இதர அருகாமை மாநிலங்களும் அனுபவிக்க ஏற்று சட்ட திட்டங்களையும் கோட்பாடுகளையும் தான் மத்திய அரசு அமல்படுத்தி வந்தது.

இது தொலைநோக்குப் பார்வையில் பார்த்த நிபுணர்கள் மாநிலத்தின் அடிமட்ட ஏழைகளுக்கு பெரிய பாதிப்பாக மாறுவதை கண்டனர்.

ஆனால் காமராஜர் போன்ற தேசியவாதிகள் சற்றே பொறுமை காட்டும்படி கேட்டுக் கொண்டாலும் அதை ஏற்க அச்சத்துடன் இருந்த சாமானியன் தயாராக இல்லையே!

திமுக மாநில சுயாட்சியை கோரியது. ஆனால் கச்சத்தீவு உட்பட பல தமிழக உரிமைகளை கருணாநிதியின் ஆட்சியின் போது தான் சுயலாபத்திற்காக ‘பண்டமாற்று’ ஸ்டைலில் விட்டுக் கொடுத்து விட்டது.

அப்படி அவர்கள் விட்டுக்கொடுத்த அனைத்து உரிமைகளாலும் தமிழகம் எந்த பயனையும் அடைந்ததாக தெரியவில்லை. ஆனால் கருணாநிதியின் செல்வச்செழிப்பும் குடும்ப அரசியல் பிரவேசமும் செழிப்பாக விரிந்து பரந்து தழைத்தோங்கியது!

கமர்சியல் அரசியல்

அன்று முதல் மத்திய அரசு தமிழகத்தை ‘கமர்சியல் அரசியல்’ கோணத்தில் மட்டுமே பார்த்து வருகிறது. அப்படி ஒரு நிலையை ஏற்படுத்திய சாதனையாளர் கருணாநிதிதான்!

ஆனால் அதையே உலக சாதனையாக நம்ப வைக்கவே மத்திய அரசு மீது துவேச குற்றச்சாட்டுகள், குழப்பவாத அரசியல் நெருக்கடிகளை அள்ளி வீசினார்கள்.

ஜூன் 30, 1977ல் கருணாநிதியின் சதி அரசியலை தமிழகம் புரிந்துகொள்ள பிரச்சாரம் செய்து அதன் பாதகங்களை வெட்டவெளிச்சமாகி ஆட்சியை பிடித்தார் எம்ஜிஆர்.

ஆனால் மத்தியில் காங்கிரஸ் கட்சியோ மீண்டும் தமிழக ஆட்சியாளர்களை நம்ப முடியாமல் திணறினர்.

முதலில் இந்திராகாந்தி எம்ஜிஆருடன் நெருக்கம் காட்டினார். பிறகு வெட்டிவிட்டு காங்கிரசின் லாபத்திற்காக மு.க.வுடன் கைகுலுக்கினார்!

உரிமைக்கு குரல் கொடுத்த அண்ணா திமுக

ஆனால் தமிழகம் எம்ஜிஆர் மீது நம்பிக்கையை இழக்காது அவரையே 11 ஆண்டுகளுக்கு அவர் மறைவு வரை டிசம்பர் 24, 1987 வரை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியது.

பிறகு ஜூன் 24, 1991–ல் ஜெயலலிதா மிகப்பெரிய வெற்றியுடன் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கும் மத்திய அரசின் ஓரவஞ்சனை போக்கு என்றுமே பிடித்தது இல்லை.

ஆனால் மத்திய – மாநில நல்லுறவுகளுக்கு விசேஷ அந்தஸ்து உருவாக்கினார். நல்ல திட்டங்களுக்கு ஆதரவும் தமிழகத்தின் நலனுக்கு பாதகமானதை எதிர்ப்பதும் அவரது அரசியல் தெளிவை சுட்டிக்காட்டியது.

இந்த நிலைப்பாட்டால் அண்ணா தி.மு.க.வுடனான தேசிய கட்சிகளின் கூட்டணி மாறுவதும் அல்லது தனித்து நிற்பதும் என காட்சிகள் தேர்தலுக்கு தேர்தல் மாறி வருவதை தமிழகம் அறியும்.

2014ல் மத்தியில் ஆட்சியைப் பிடித்த பாரதீய ஜனதாவிற்கு அப்போது பாராளுமன்றத்திலும் மிகப் பலமான கட்சியாக இருந்த அண்ணா திமுகவின் ஆதரவு தேவைப்பட்டது.

தோற்றுவிட்ட திமுகவோ காங்கிரஸ் கட்சியுடன் உறவை தொடர்ந்தது.

அன்று ஜெயலலிதா முடிவு எடுத்திருந்தால் பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைச்சக பதவியை கேட்டுப் பெற்றிருக்கலாம். ஆனால் அதை ஜெயலலிதா விரும்பவில்லை.

என்றேனும் அது தமிழகத்தின் மாநில உரிமைகளுக்கு பாதகமாக மாறலாம் என்று உணர்ந்து கூட்டணி தொடர்ந்தாலும் ஆட்சியில் பங்கேற்கவே இல்லை.

2016ல் ஜெயலிதா மீண்டும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பில் அமர்ந்த நாளிலும் பாரதிய ஜனதாவை தமிழகத்தில் எதிர்த்து போட்டியிட்டே தனது அரசியல் நிலைபாட்டை வெளிப்படுத்தினார்.

ஜெயலலிதாவின் முகராசிக்கு தமிழகம் அவருக்கு தொடர் வெற்றியை தந்தது. இந்த மகர ராசிக்காரருடன் வீண் அரசியல் சச்சரவுகள் வேண்டாம் என்ற நிலைப்பாட்டுடன் பிரதமர் மோடியும் தமிழக உரிமைகளுக்கு மதிப்பு தந்து வந்ததை நாடு அறியும்.

2019ல் ஜெயலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்ட பல்வேறு அதிரடி நகர்வுகளால் அண்ணா திமுக உட்கட்சி பூசல்கள் காரணமாக வலுவிழந்து நின்றது.

நல்ல பேராதரவு பெற்ற தலைமை இல்லாததால் அத்தேர்தலில் அண்ணா திமுக மிகப்பெரிய சறுக்கலை கண்டது. திமுகவால் 39 தொகுதிகளில் 38 சீட்டுகளை வென்று விட முடிந்தது.

இந்த தோல்வியின் அனுபவத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் இணைந்து ஆட்சியை நிரந்தர தன்மை பெற வைத்து விட்டனர்.

கட்சியிலும் ஆட்சியிலும் புதிய சிந்தனை

கட்சியினர் மத்தியிலும் புதிய நம்பிக்கையையும் தெம்பையும் தர துவங்கி தற்போது மீண்டும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க புயலாய் களப்பணிகள் செய்து பிரச்சாரத்தின் இறுதி கட்டத்தில் மீண்டும் அடுத்த ஆட்சியை பிடிக்க நம்பிக்கை நட்சத்திரங்களாக நட்சத்திரங்களை ஜொலிக்கின்றனர்.

முதல்முறையாக பாரதீய ஜனதாவுடன் கூட்டு, அதனால் தமிழகத்தின் உரிமைகள் பறிபோகுமா? என்ற நியாயமான கேள்விக்கு பதிலாக அண்ணா திமுக என்றுமே மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காது என்ற உறுதியை தந்துள்ளனர்.

நீட் தேர்வில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு விசேஷ 7.5% இடஒதுக்கீட்டை பெற்று தந்தனர்.

தமிழகத்தில் இருந்த ஏழை பின்தங்கிய சமூக பிரிவுகளை இனி ‘தேவேந்திரகுல வேளாளர்’ என்னும் சட்டத்தை கொண்டு வந்தும் விட்டனர்.

மதுரையில் அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனை.

இதை எல்லாம் கடந்த வருடத்தில் மத்திய அரசின் ஒப்புதலால் தமிழகம் பெற்றவைகள்.

தமிழகத்தில் சாமானிய ஏழைகளின் நலன் காக்க வாழ்வாதார திட்டங்கள் பல இருக்கிறது. அதற்கும் மத்திய தொகுப்பில் இருந்து நிதி பெற வேண்டும்.

இயற்கை பேரிடர் காலங்களில் போர்க்கால அடிப்படையில் உயிர்காக்கவும், மறுசீரமைப்புக்கும் மத்திய அரசின் நிதி பங்களிப்பு தேவைப்படுகிறது.

ஆகவே மத்திய அரசுடன் சாதகமான சூழ்நிலையை என்றும் மாநில அரசு பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

காமராஜர் வழி அரசியல்!

ஆனால் திமுகவை போல் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தும் எந்த பயனும் பெறாமல் இருந்து விடுவோமோ என்ற நிலை வராது என்ற உத்திரவாதத்தை அண்ணா திமுகவினர் பல ஆண்டுகளாகவே நிரூபித்து வருவதையும் தமிழகம் அறியும்.

கச்சத்தீவு, 2ஜி, பயிர் கடன் ரத்து முதலிய விவகாரங்களில் திமுக மத்திய அரசில் இடம் பிடித்தும் தமிழகத்தின் நலனை தாரை வார்த்தது, தங்கள் சுயநல லாபத்திற்காக மட்டுமே செயல்பட்டது என்பதை தமிழகம் உணர்ந்து கொண்டது.

இன்றோ அண்ணா திமுக பெரிய பாப்புலர் தலைவரின் கீழ் இல்லாமல், சாமானிய அரசியல் தலைவர்களாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் கீழ் இதர தலைவர்கள் தேர்தல் பணியாற்ற தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர்.

மத்திய அரசுடன் நெருக்கம் என்பது மட்டுமின்றி மத்தியில் வலுவான ஆட்சியாளர்களாக இருக்கும் பாரதீய ஜனதா தமிழகத்தில் நல்லாட்சி தொடர அதிமுகவுடன் கூட்டு!

தேசிய முற்போக்கு கூட்டணி என்ற போர்வையில் பாரதீய ஜனதா ஆதிக்கத்தை வெளிப்படுத்தாமல், அண்ணா திமுகவுடன் தேர்தல் கூட்டு என்பதை ஏற்று 20 சீட்டுகள் மட்டுமே என்றாலும், அதில் வெற்றிக்கு பங்காற்ற பிரதமரையும் தேர்தல் பிரச்சாரத்துக்கு பின்தங்கிய தமிழக பகுதிக்கு வரவழைத்து இருப்பது இந்த வெற்றிக் கூட்டணிக்கு புது மதிப்பை மக்களிடம் கொண்டு வந்து விட்டது.

மதுரையிலும், கன்னியாகுமரியில் அப்பகுதிக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை பிரதமரையே அறிவிக்க வைத்திருப்பதுதான் அண்ணா திமுக இம்முறை ஏற்படுத்தி இருக்கும் கூட்டணியின் வலிமை, தமிழகத்திற்கும் சிறப்பு சேர்க்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *