கீவ், ஆக. 6–
புதின் அவரை போன்ற உருவ ஒற்றுமை கொண்ட ஒருவரை தனக்கு பதிலாக பயன்படுத்தி வருகிறார் என்று, உக்ரைன் ராணுவ அதிகாரி குற்றசாட்டியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் முதலாக, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்த சண்டை தற்போது வரை ஓய்ந்த பாடில்லை. ரஷ்ய அதிபர் புதின் நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை ஓரங்கட்டி வருகின்றன. இருந்தும் இதனையெல்லாம் ரஷ்யா கண்டுகொண்டதாய் தெரியவில்லை.
உக்ரைன் குற்றச்சாட்டு
இந்நிலையில், தற்போது புதிய வித்தியாசமான ஒரு குற்றசாட்டை உக்ரைன் ராணுவ அதிகாரி கைரிலோ புடானோவ், ரஷ்ய அதிபர் புதின் மீது வைத்துள்ளார். அதாவது முன்னர் போல, புதின் நடவடிக்கை இல்லை. அவரை போல உருவ ஒற்றுமை கொண்ட ஒருவரை தனக்கு பதிலாக பயன்படுத்தி வருகிறார். அந்த புதியவரின் காது , உயரம் வித்தியாசப்படுகிறது. நடவடிக்கைகள் கூட வித்தியாசப்படுகிறது என குற்றம் சாட்டி வருகிறார்.
ரஷ்ய அதிபர் புதினுக்கு சமீப காலமாக உடல்நிலை சரியில்லை. அதனால் தான் இந்தமாதிரி செய்கிறார் என்ற குற்