சினிமா

தனுஷின் ‘வடசென்னை’க்குப்பின் பாகம் 2, பாகம் 3 அடுத்தடுத்து வரும்: டைரக்டர் வெற்றிமாறன் பேட்டி

படத்தில் அமீர் வேற லெவல நடிச்சிருக்கார். என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் உடன் நடித்த ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் அனைவருமே சூப்பரா நடிச்சிருக்காங்க. சந்தோஷ் நாராயணன் பெரிய இசை படத்திற்கு பிளஸ் என்றார் தனுஷ்.

‘வடசென்னை’ படத்திற்கு ‘ஏ’ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது. எந்த ஒரு காட்சியும் நீக்கப்படவில்லை. முதல் பாகத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் மற்றும் அடுத்தடுத்த படங்கள் வெளிவரும்.. அந்தந்த காலகட்ட காட்சிகளுக்கு ஏற்ப தனுஷ் அவர்கள் அருமையாக நடித்துள்ளார். அவரின் பேச்சு. நடிப்பு. அசத்தியுள்ளார். கலை இயக்குனர் ஜாக்கிங் ஜெயில் செட்டையும் வடசென்னை செட்டையும் மிகப் பிரமாதமாக செய்துள்ளார்.

இந்த படத்தில் ஒரு இனிமையான கதாபாத்திரம் நடித்துள்ளேன். தனுஷுடன் முதல் முதலாக ஜோடியாக நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. படத்தின் முதல் சீனில் பார்த்தவுடன் என்னை லவ் பண்ணுவார் தனுஷ் என்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

‘வடசென்னை’ படத்தை பார்த்தேன் ஒரு ரசிகனாக. படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. தனுஷின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது.வெற்றிமாறன் ஒரு தரமான படத்தினை இயக்கியுள்ளார் என்றார் அமீர்.

இந்த மாதிரி படங்கள் வெற்றிமாறனால் மட்டுமே இயக்க முடியும். ஒரு கடின உழைப்பாளி, திறமையான நடிகர். வெற்றிமாறனுடன் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். என்னுடைய வாழ்த்துக்கள் என்றார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண்.

நடிகர் பவன், டேனியல் பாலாஜி ஆகியோரும் பேசினார்கள். வந்திருந்தவர்களை மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *