செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரம் இணையதளத்தில் வெளியீடு

சென்னை, ஜூன்.27-

தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய கல்வி கட்டண நிர்ணயக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இந்த குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிகுலேசன், மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, தனியார் சுயநிதி பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து வருகிறது.

அதற்கான பட்டியல் tamilnadufeecommittee.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் விடுபட்ட பள்ளிகளை கணக்கில் எடுத்து அந்த பட்டியலை தயார் செய்தும், அந்த பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழுவினரை சந்தித்து கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும் என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கல்வி கட்டண நிர்ணய பட்டியலில் இல்லாத பள்ளிகளின் பெயரை பட்டியலாக தயாரித்தும், அந்த பள்ளிகள் ஒரு மாத காலத்துக்குள் கட்டண நிர்ணயக்குழுவை நேரில் சந்தித்து கட்டணம் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *