சினிமா செய்திகள்

தந்தை – மகள் பாசம் சொல்லும் ‘எந்தை’ குறும்படம் : டாக்டர் வினிஷா கதிரவன் நாயகி!

நிஜத்தில் தந்தை – மகள், நிழலிலும் அப்படியே

தந்தை – மகள் பாசம் சொல்லும் ‘எந்தை’ குறும்படம் :

டாக்டர் வினிஷா கதிரவன் நாயகி!

 

வார்த்தைகளையும் பாசத்தையும் எதற்காக சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறாய்?

அன்பையும், ஆதரவையும் யாருக்காக ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறாய்?

நீ கொட்டித் தீர்க்காத அன்பை மனதில் பூட்டி வைத்து நாளை யாருக்காக தரப் போகிறாய்?

நீ கொடுப்பது பன்மடங்காகி உனக்கே திரும்பி வரும் என்றால் அது அன்பு மட்டுமே…

யாருக்காக நீ அழ நினைக்கிறாயோ, யாரை நீ கட்டிப்பிடிக்க நினைக்கிறாயோ, யாரை அணைத்து முத்தமிட நினைக்கிறாயோ, யாரை உலகம் என சொல்ல நினைக்கிறாயோ, அதை இன்றே – செய்து விடு. அப்பா உன்னோடு இருக்கிறார்…’’

என்று இளைய தலைமுறைக்கு தந்தை பாசத்தை எடுத்துச் சொல்லி இருக்கிறார் கதிரவன். குறும்படம் : ‘எந்தை’.

கதிரவன் என்றால் பகலவன். பகலவனுக்கு அடியில் எல்லாமே சாத்தியம் என்று ஒரு அனுபவ மொழி உண்டு. அதை கண் எதிரில் நிரூபித்திருக்கிறார் கதிரவன். வினிஷா விஷன் விளம்பர நிறுவனத்தின் தலைவர் மட்டுமல்ல கதை, தயாரிப்பு, இயக்கம் மேற்பார்வை, நடிப்பு என்று நான்கு பொறுப்புக்களை கையில் எடுத்து துணிச்சலோடு கேமரா முன் முகம் காட்டி இருக்கிறார்.விவசாயியின் முக்கியத்துவத்தையும், நோய் எதிர்ப்பு சக்தி தரும் பாரம்பரிய முறையைப் பற்றியும் விளக்கும் வினிஷா விஷன் நிறுவனம் தயாரித்த 7 நிமிட குறும்படம் ‘எந்தை’.

* இளைஞர்கள் தங்களின் அன்பை தந்தையிடம் வெளிப்படுத்த வலியுறுத்துகிறது.

* கிராமப்புறங்களில் விவசாயிகள் படும் கஷ்டங்களை எடுத்துரைக்கிறது.

என்று 2 வாக்கியத்தில் கதைச் சுருக்கத்தை சொல்லிவிடலாம். தந்தையர் தினத்தன்று, இக்குறும்படம் யூடியூப் இணைய தளத்தில் ஒளிபரப்பானது.

உலகையே கதிகலங்க வைத்திருக்கும் ‘உயிர்க்கொல்லி’ கொரோனா தொற்று நோய்க்கு எதிரான ஒரே பாதுகாப்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதே.

‘எந்தை’ குறுபடம் ஒரு கிராமப்புற விவசாயக் குடும்பத்தின் தந்தையின் வாழ்க்கையையும் அவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றியும் பேசுகிறது. நடுத்தர குடும்பங்களில் தந்தையும், அவர்களது குழந்தைகளுடைய கல்வி, சுகாதாரம் மற்றும் பிற தேவைகள் குறித்து ஒரு யதார்த்தமான பார்வையை வழங்குகிறது.

பொதுவாகவே குழந்தைகள் பெரும்பாலும் தாயிடம் காட்டும் அன்பையும் உணர்ச்சியையும் தந்தையிடம் காட்டுவதில் தயக்கம் கொள்கின்றது என்பதை இந்தக் குறும்படம் அடிக்கோடிட்டு காட்டுகிறது.

மேலும் இந்தியக் குடும்பங்களில் உள்ள குழந்தைகள் தாய்மார்களின் மூலமே தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய எண்ணுகிறார்கள், எனவே தந்தையர்களின் கடின உழைப்பு, தியாகம் போன்றவற்றை புரிந்து கொள்ள இயலவில்லை, அதை புரிந்து கொள்ளும் நேரத்தில் அவர்கள் நம்மோடு இருப்பதில்லை என்ற கருத்தினை பார்க்கிறவர்களுக்குள் ஆழமாக கொண்டு செல்ல இந்த குறும்படம் முயற்சிக்கிறது.

குறும்படத்தின் கிரியேட்டிவ் ஹெட் முக்கிய கதாபாத்திரத்தில் கே.வி.கதிரவன். இயக்கம்: விஜய்குமார். வினிஷா கதிரவனுக்கு – முக்கிய வேடம். ஒளிப்பதிவாளர்: சதிஷ், ஆன்லைன் எடிட்டர்: குமார். இசையமைப்பாளர் : கண்ணன். கிராமப் பகுதிகளில் படப்பிடிப்பு– பச்சைப்பசேல் வயல்வெளி– கண்களுக்கு குளுமை!

* * * 

நிஜத்தில் தந்தையும், மகளும் – நிழலிலும் தந்தையும் மகளும் ஆக… பாசம் சொல்லும் குறும்படம்.

மகள் – வினிஷா கதிரவன் – டாக்டர். இப்போது போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘ஹவுஸ் சர்ஜனாக’– பயிற்சி டாக்டராக பணியில் இருப்பவர் பிரபல நாட்டியக் கலைஞர் ஊர்மிளா சத்ய நாராயணாவின் சிஷ்யை. ஆற்றல்மிகு இளம் நாட்டியக் கலைஞர்.

திருமதி. ஒய்ஜிபியின் தலைமையிலான ‘பாரத் கலாச்சார்’ நிறுவனத்தின் யுவகலாபாரதி விருது பெற்றவர்.

* * *

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *