செய்திகள் நாடும் நடப்பும்

தத்தளிக்கும் நகர வீதிகளில் ஊனமுற்றோர் நிலை உணர்ந்து முதல்வர் ஸ்டாலின் உதவிக்கரம்


ஆர். முத்துகுமார்


கனமழை விடிய விடிய பெய்து விட்டால் சென்னை நகர வீதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பது வாடிக்கை தான்! மழைநீர் வடிகால் முதல் பாதாள சாக்கடைகள், நீர் செல்லும் வழித்தடங்கள் எல்லாமே கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலோக நாம் தூக்கியெறிந்த பல்வேறு மக்கா குப்பை கூளங்கள் நீர் செல்லும் பாதைகளை அடைத்து வழிவிடாமல் இருப்பதால் தான் இப்படி தேங்கி விடுகிறதோ? என்ற கேள்விக்கு விடையை இதுபற்றிய அரசு தரப்பு நிபுணர்களிடம் விட்டு விடுவோம்!

நாம் குறைந்தது இன்று முதலாவது பிளாஸ்டிக் டீக் கப்பையோ, ஸ்டிராவையோ உபயோகிப்பதை அறவே நிறுத்துவோம்; அல்லது உபயோகித்த பிறகு உரிய முறையில் அதை வீசி எறிவோம்.

பிளாஸ்டிக் கழிவுகளால் இப்படிப்பட்ட சேதத்தை ஏற்படுத்த முடியுமா? அடையாறு, கூவம் தற்போது பெருக்கெடுத்து ஓடுகிறது அல்லவா? கரைப்பகுதிகளில் விட்டுச் சென்றிருக்கும் பல ஆயிரம் டன் குப்பைகளில் பெருவாரியாக பிளாஸ்டிக் பைகள், பால் பாக்கெட்டுகள் முதலியவை தான் தென்படுகிறது.

நம்மில் பலரும் வாகனத்தைக் கொண்டு செல்ல முடியாமல் தவிக்கிறோம், நடந்து செல்லக்கூட அஞ்சுகிறோம். உணவு பொருட்கள் வாங்கவோ, காய்கறிகள் வாங்கவோ, பால் பாக்கெட் வாங்கி வரவோ கூட தயங்குகிறோம்!

வீட்டில் தனிமையில் இருக்கும் முதியவர்களின் நிலை தான் பரிதாபமானது. முன்பைப் போல் Dunzo, Swiggy முதலிய டெலிவரிகாரர்களால் கூட சரிவர இயங்க முடியாததால் உரிய நேரத்தில் உணவையும் அவசர தேவைக்கு மருந்து மாத்திரைகளையும் கூட பெறமுடியாது.

இந்நிலையை உணர்ந்தே பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கட்டும் என்று வெளியே முதல்வர் ஸ்டாலின் அரசு அலுவலர்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்து விட்டார்.

மேலும் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் உடனடியாக சென்னை திரும்பத் தேவையில்லை என்றும் அறிக்கை வெளியிட்டார்.

பல்வேறு கோணத்தில் சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு என்பதை உணர முடிகிறது.

ஆனால் மாற்றுத் திறனாளர்களின் நிலைமையை யோசித்துப் பார்த்தால் பாவமாகத் தான் இருக்கிறது.

முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை இது:

அத்தியாவசிய சேவைகள் வழங்கும் துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறன் அரசுப் பணியாளர்களின் நடைமுறை பிரச்சனைகள், சிரமங்கள் மற்றும் மழை காலங்களில் அவர்களால் வெளியே வர முடியாத சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து அரசுத் துறைகளில் பணிபுரியும் மாற்றுத் திறன் அரசப் பணியாளர்களுக்கு ,இதுபோன்ற பெருமழை மற்றும் பேரிடர் காலங்களில் , அவர்களுக்கு சிறப்பு விடுமுறை/ பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்க உத்தரவு இட வேண்டுமாய் தமிழக முதல்வர் அவர்களை, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என்று மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

முதல் அமைச்சர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளர் நிலைமையை உணர்ந்து அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கையை மனதில் கொண்டு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.

மாநகர வீதிகளில் தத்தளிக்கும் ஊனமுற்றோர் நிலை உணர்ந்து அவர்களுக்கு

முதல்வர் ஸ்டாலின் உதவிக்கரம் நீட்டி கைதூக்கிவிட முன்வரவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *