வாழ்வியல்

தண்ணீர் தாராளமாகக் குடித்தால் நோய்கள் நெருங்காது

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்னும் பழமொழி நமது உடல் நலனின் தேவையை பளிச்சென்று விளக்குகிறது. நோய்களின் கூடாரமாகி விட்ட மனிதனுக்கு சொத்துகள் எத்தனை இருந்தாலும் நிறைவு தருவதில்லை.

* ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை விடியற்காலையில் செய்து வாருங்கள். உடல் சுறுசுறுப்படையும். நாம் உண்ணும் உணவின் சத்து உடலின் எல்லா இடங்களுக்கும் பரவும்.

* உடற்பயிற்சி செய்வதுடன் உங்கள் உணவுப் பழக்கத்திலும் சிறு மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். பெரும்பாலான உணவு காய்கறிகள் மற்றும் பழங்களாக இருக்கட்டும். மாற்றத்தை விரைவிலேயே உணர்வீர்கள்.

* ஏராளமான தண்ணீர் குடியுங்கள். விடியற்காலையில் எழுந்ததும் முதல் வேலையாக ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பவர்களை நோய்கள் நெருங்காது.

* நன்றாக தூங்குங்கள். குறைந்தபட்சம் எட்டு மணிநேரம் தவறாமல் தூங்குங்கள். மதியம் அரை மணிநேரம் குட்டித் தூக்கம் போடுவதும் உடலுக்கு நல்லது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

* உடலுக்கு என்னென்ன சத்து தேவையென்பதை அறிந்து உண்ணுங்கள். அதிக கொழுப்பு, எண்ணைப் பொருட்களை தவிர்க்கவும். பல நிற காய்கறிகளில் பல வகை குணங்கள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

* உடல் எடையை கவனித்துக் கொள்ளுங்கள். அதிக எடை இருப்பதாக உணர்ந்தால் அதை கண்டிப்பாகக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

* உடல் எடையை உடற்பயிற்சியின் மூலமாகவும் உணவு பழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலமும் மட்டுமே குறைக்க வேண்டும். பட்டினி கிடப்பதும் மாத்திரைகள் உட்கொள்வதும் ஆபத்தானவை.

* அளவாக உண்ணுங்கள். இடைவெளிகளில் கொறிப்பதை நிறுத்துவது மிகவும் முக்கியம். உணவு உட்கொள்ளும் முன் சற்று தண்ணீர் குடிப்பது அதிகமாய் உண்பதைத் தடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *