செய்திகள்

கொளுத்தும் வெயிலில் சுருண்டு விழுந்து செத்த 15 குரங்குகள்

போபால், ஜூன். 8–

மத்திய பிரதேச வனப்பகுதிகளில் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் கடும் வறட்சி காணப்படுகிறது. இந்நலையில் பஞ்சப்புரா ஜோஷி பாபா வனப்பகுதியில் கடுமையான வெயில் தாங்க முடியாமல் 15 குரங்குகள் ‘பொத்பொத்தென்று’ செத்து விழுந்துள்ளன.

ஆடு மேய்க்க சென்ற சிறுவன் ஒருவனும், சில கிராமத்தினர்களும் குரங்குகள் ஆங்காங்கே இப்படி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். 8 குரங்குகள் குகைக்குள்ளும், மற்ற 7 குரங்குகள்கள் வெளியிலும் இறந்து கிடந்துள்ளன. கடும் வெப்பத்தால் குடிநீருக்காக அலைந்து திரிந்து அவை உயிரிழந்திருப்பதாக வனப்பகுதியினர் தெரிவித்தனர்.

அழுகிய நிலையில் இந்த குரங்குகள் கிடந்துள்ளன. அவற்றை வனத்துறை எரித்தனர் என்று வனத்துறை அதிகாரி மிஷ்ரா தெரிவித்தார்.

இன்னொரு பகுதியிலிருந்து வந்த குரங்குகளை தண்ணீர் குடிக்க விடாமல் அப்பகுதி குரங்குகள் துரத்தி அடித்ததால், பாவம் அந்தக் குரங்குகள் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியுள்ளன. வழியில் தாகம் எடுத்தும், கடும் வெயில் தாளாமலும் இறந்துள்ளன என்றார் அவர்.

ஒரு சில குரங்குகளின் உடலைக் கைப்பற்றி வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *