செய்திகள்

தண்டையார்பேட்டையில் வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ் பிரச்சாரம்

சென்னை, மார்ச் 22–-

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ், தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் பகுதியில் பிரசாரம் செய்தார்.

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் ஆறாம் நாளாக அண்ணா தி.மு.க. வேட்பாளரும் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.எஸ். ராஜேஷ், தொகுதி மக்களை நல்வழிப்படுத்தி மக்கள் பணியாற்ற வ.உ.சி. நகர் பகுதியில் உள்ள வலம்புரி விநாயகர் ஆலயத்தில் பிரார்த்தனை செய்து வழிபட்டு இராயபுரம் மனோவுடன் இரட்டை இலை சின்னத்திற்க்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவில் மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளித்து மக்கள் நலத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குவதால் இன்று நாடு போற்றும் முதல்வராக முதலமைச்சர் எடப்பாடியார் செயல்பட்டு வருகிறார். அதன் காரணமாக சிறந்த மாநிலமாக தமிழகத்துக்கு பல விருதுகள் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

அதேபோன்று ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் அண்ணா தி.மு.க. ஆட்சியில் மட்டுமே பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொருக்குப்பேட்டை புது மேம்பாலம், அம்மா கலைக்கல்லூரி, அம்மா பாலிடெக்னிக், ஐ.டி.ஐ, கொருக்குப்பேட்டை குப்பை கிடங்கு வளாகத்தில் மூன்று மதத்தினருக்கான மயான பூமி தலா 1 ஏக்கர் விதம் 3 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு மற்றும் தொகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வரையிலான மெட்ரோ புதிய ரெயில் திட்டத்தை செயல்படுத்தி ஆர்.கே.நகர் தொகுதிக்கென டோல்கேட், புதிய வண்ணாரப்பேட்டை, மற்றும் வண்ணாரப்பேட்டை ரெயில் நிலையம் அமைத்து தந்த அண்ணா தி.மு.க, அரசுக்கு அமோக ஆதரவு தந்து இரட்டை இலை சின்னத்திற்க்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத்தொடந்து வ.உ.சி. நகர் மார்கெட் லைன் 9,10,12, குறுக்கு தெரு, கார்பரேஷன் காலனி 1 முதல் 4 தெருக்கள், சேனியம்மன் கோவில் தெரு, மாதா கோவில் தெரு, கிரகலஷ்மி, இ.எம்.ஆர், அகஸ்தியா ஆகிய அடுக்குமாடி தனியார் குடியிருப்பு பகுதிகள், வைத்தியநாதன் தெரு, ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக, சென்று அரசின் திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

இதில் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி கழக செயலாளர் ஆர்.எஸ். ஜெனார்தனம், ஏ.கணேசன் வட்ட செயலாளர்கள் இ.வேலுமேஸ்திரி, பன்னீர் செல்வம், மற்றும் ஓ.ஏ.ரவிராஜன், இ.ரா.முரளிமுருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *