ஊட்டி, ஜூலை 22–
தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் உதகை – குன்னூர் இடையே மலை ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும். இந்த ஆண்டு எதிர்பார்த்த நேரத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கியுள்ளது.
இருப்பினும், தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அருவங்காடு பகுதியில் மரம் தண்டவாளத்தில் விழுந்ததால் உதகை- – குன்னூர் இடையே மலை ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. உதகையில் நேற்றிரவு முதல் சூறாவளி காற்று வீசி வருவதால் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.