செய்திகள்

தண்டவாளத்தில் தானாக ஓடிய மின்சார ரெயில்; பயணிகள் பீதி

அரக்கோணம், ஆக. 10–

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் நின்றிருந்த ரெயில் ஒன்று, தானாக அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடியது பயணிகளை அச்சமடையச் செய்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு சென்னையிலிருந்து சென்ற புறநகர் ரெயில் ஆறாவது நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த ரெயில் கட்டுப்பாடின்றி தானாக நகர்ந்துள்ளது. ரயிலில் இருந்த பயணகள் ஓட்டுனர் ரயிலை இயக்குவதாக நினைத்து அமைதியாக இருந்துள்ளனர்.

ஆனால் சிறிது நேரத்தில் பலத்த சத்தம் கேட்டுள்ளது. ரெயிலில் இருந்த பயணிகள் எட்டிப் பார்த்தபோது, மின்சார ரெயில் செல்லாத மாற்றுப்பாதையில் ரெயில் தானாக ஓடுவது தெரிய வந்துள்ளது.

பயணிகள் அச்சம்

அதுமட்டுமில்லாமல், ரெயிலையும் உயர் மின் இணைப்பையும் இணைக்கும் கிளிப் உடைந்ததால் பலத்த சத்தம் கேட்டது தெரிய வந்துள்ளது. அந்த ரெயில் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் நிற்காமல் சென்றதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

தகவலறிந்து சென்ற ரயில்வே உயரதிகாரிகள் திடீரென ரயில் நகர்ந்தது எப்படி என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் இணைப்பு இல்லாத தண்டவாளத்தில் மின்சார ரெயில் சென்றதால் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் மீண்டும் ரயில் 6 ஆவது நடைமேடைக்கு கொண்டு வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *