திருப்போரூர், செப் 2
தண்டலம் முதல்நிலை ஊராட்சியில் செட்டிநாடு மருத்துவமனை புதிய கட்டிடம் ராம்பால் நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தண்டலம் முதல்நிலை ஊராட்சியில் மேட்டுத்தண்டலம் கிராமத்தில் திருப்போரூர் வட்டாச்சியகம் செல்லும் பிரதான சாலையையொட்டி விநாயகர் கோவில் அருகே ராம்பால் நிர்வாகம் தனது சொந்த செலவில் ரூ. 3 லட்சம் மதிப்பில் செட்டிநாடு மருத்துவமனை மையத்திற்கு புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட மருத்துவமையத்தின் திறப்பு விழா நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தண்டலம் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவரும் அதிமுக கட்சியின் தெற்கு ஒன்றிய கழக இளைஞர் அணிச்செயலாளருமான தண்டலம் எம்.ஆனந்தன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பரிமளா யுவராஜ் முன்னிலை வகித்தார். 3வதுவார் உறுப்பினர் நலிதா பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ராம்பால் நிறுவனத்தின் தலைவரும் , இயக்குனருமான டி.ஏ. ஸ்ரீதர் கலந்து கொண்டு மருத்துவமனை மையத்தை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். துணை நிர்வாக இயக்குனர் ராம்கணேஷ் வெங்கடேசன், செட்டிநாடு ஆராய்ச்சி மற்றும் கல்வி துணைவேந்தர் டாக்டர். ஆர்.ஸ்ரீதர் , இயக்குனர் டாக்டர். ஆர். முத்துசெல்வன், செட்டிநாடு மருத்துவ மனை துணைக்காணிப்பாளர் டாக்டர். ஏ.பிரபாகரன், ராம்பால் நிறுவனத்தின் முதுநிலை மனிதவள மேலாண்மை எம்.லஷ்மணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தங்கள் ஊராட்சிக்கு சிறப்பான மருத்துவமனை கட்டித்தந்த ராம்பால் நிறுவனத்தாருக்கும் மருத்துவம் பார்க்க உள்ள மருத்துவமனை நிர்வாகிகளுக்கும் சால்லையுடன் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் தண்டலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களான மோ.வெங்கடேசன், கலைச்செல்வி ஏழுமலை, சாமுண்டிஸ்வரி பொன்னுரங்கம், நந்தினி துரை த.சேகர், டில்லி திருநாவுக்கரசு, வீ.பராந்தாமன், செட்டிநாடு மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரி சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை நந்தகோபால் ஒருங்கிணைத்து வழங்கினார். ஊராட்சி செயலர் கோபால் நன்றி தெரிவித்தார்.