சிறுகதை

தண்டனை – ராஜா செல்லமுத்து

நோய்க் காலங்களில் யாரும் வெளியே வரக்கூடாது என்று முழு நாள் ஊரடங்கு அமல் படுத்தியது அரசு . ஆனால் இது எதையும் சட்டை செய்யாமல் அவரவர் வேலைகளில் மூழ்கி கிடந்தார்கள் காவல்துறைக்கு கடுமையான கோபம் வந்தது

என்ன இது ? மக்களுக்காகத்தான் நாம நல்லது செய்கிறோம். இது அவங்களுக்கு புரிய மாட்டேங்குது அவங்க நல்லா இருக்கணும். அவங்க குடும்பம் நல்லா இருக்கணும் . அவங்கனால இந்த சமூகம் கெட்டுப் போக கூடாதுன்னு நாம நினைக்கிறோம் .ஏன் இதை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க? என்று காவல்துறையினர் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்

முழு ஊரடங்கு மீறி இருசக்கர வாகனங்களில் செல்வோர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தார்கள்

திருக்குறள் ஒப்பிக்க சொல்லி தண்டனை கொடுத்தார்கள். தாவித் தாவிச் செல்லும் தண்டனை கொடுத்தார்கள். தோப்புக்கரணம் போட சொன்னார்கள்.

இப்படி எத்தனையோ தண்டனைகள் கொடுத்து பார்த்தார்கள் .இந்த மனிதர்கள் அடங்குவதாக இல்லை. அவரவர்கள் தங்கள் அலுவல் நிலையை காரணம் காட்டி வெளியே சென்று கொண்டிருந்தார்கள்

இதனால் காவல்துறையினருக்கு கடுமையான கோபம் வந்தது

இந்த மனிதர்களை என்ன சொல்லி திருத்துவது? நோய் தீவிரமாக இருக்கிறது. அதுவும் ஒருவருக்கு ஒருவர் வரக்கூடிய நோய் என்பதால்தான் ஒவ்வொரு மனிதரையும் சந்திப்பதையும் அவர்கள் உரையாடுவதும் கூட நாம் தள்ளி வைத்திருந்தோம். இது கூட தெரியாமல் இவர்கள் ஏன் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் .இவர்களுக்கு நூதனமான முறையில் தண்டனை கொடுத்தால்தான் இவர்களின் இந்த விளையாட்டுப் புத்தி போகும் என்று காவல்துறை முடிவெடுத்தது

அன்று விதிமுறைகளை மீறி வீதியில் தெரிந்தவர்களை பிடித்து விசாரித்தார்கள் காவல்துறையினர்

வீதியில் தெரிந்தவர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு காரணங்களைச் சொன்னார்கள் .அதை காவல்துறை ஏற்பதாக இல்லை.

சார், நான் பார்மசியில் மருந்து மாத்திரை வாங்க வந்தேன் என்று ஒருவர் சொன்னார்.

சார் நான் ஆஸ்பத்திரிக்கு வந்தேன் என்று இன்னொருவர் சொன்னார்.

இப்படி பதில் சொன்னவர்களைப் பார்த்தால் நம்பகத்தன்மை முற்றிலும் இல்லாமல் இருந்தது.

தேவையில்லாமல் இதில் சுற்றியவர்களை இவர்களுக்கு அளிக்கும் தண்டனைதான் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று நினைத்து காவல்துறை

காரணமின்றி வீதிகளில் சுற்றித்திரிந்த 10 பேரை பிடித்தார்கள் . அவர்களை எல்லாம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

ஏதோ தங்களை பரிசோதனை செய்யப் போகிறார்கள். நோய்க்கான அறிகுறியை கண்டுபிடிக்க போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு மருத்துவமனை சென்றதும் பேரதிர்ச்சி காத்திருந்தது.

வீதியில் சுற்றித்திரிந்தவர்களை நோய் பாதித்த மனிதர்களுக்கு காவலர்கள் ஆக அமர வைத்தார்கள்

இதைக் கண்டவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்

சார் இனிமேல் நான் வெளில போக மாட்டேன் சார். வர மாட்டேன் என்னை மன்னிச்சுடுங்க. நான் தப்பு பண்ணிட்டேன். நான் இந்த நோயாளி கூட இருக்க முடியாது சார் என்று மன்றாடினார்கள்.

இல்ல நீங்க கொஞ்ச நேரம் அந்த நோயாளி கூட உட்கார்ந்து பாருங்க. அவங்க படுற கஷ்டம் என்னன்னு தெரியும். அவங்க எவ்வளவு சிரமப்படுகிறார்கள். உயிருக்கு எவ்வளவு பயந்து படுத்து இருக்காங்க. அவங்க மனசு என்ன மாதிரி இருக்கு. அப்படின்கிற விஷயத்தை தெரிஞ்சா மட்டும் தான் நீங்க வீதியில் இப்படி சுத்தித் திரிய மாட்டீங்க. உங்கள மாதிரி ஒரு பத்து பேர் இந்தப் படிப்பினையை சொன்னாத்தான் முழு ஊரடங்கு எதுக்காக போட்டு இருக்காங்க என்று தெரியும் என்று விடாப்பிடியாக சொன்னார்கள் காவல்துறையினர்

எவ்வளவோ அந்த மனிதர்கள் சொல்லிப்பார்த்தும் காவலர்கள் விடவே இல்லை.

நோயாளிகளின் அருகிலேயே அமர்த்தப்பட்டார்கள் அந்த வீதியில் சுற்றித்திரிந்த நபர்கள்.

இந்த செய்தி காட்டுத் தீ போல் பரவியது.அத்தனை பேர்களுக்கும் நோயைவிட நோயாளிகளின் அருகில் அமர வைப்பார்கள் என்ற ஒருவிதமான பயம் வீதியில் சுற்றித் இருப்பவர்களைப் பற்றிக் கொண்டது

அதிலிருந்து காரணமில்லாமல் யாரும் வீதிகள் வருவதில்லை.

காவலர்கள் சொல்லிக்கொண்டார்கள் ஒவ்வொரு மனிதனும் வேடிக்கையாகத் தான் இருக்கிறான் . எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

அவரவர்களுக்கு பட்டால் தான் தெரியும் வேதனை . அதற்குத்தான் இந்த பாடம் கற்றோம் என்று காவல்துறையினர் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டார்கள்

அதிலிருந்து ஊரடங்கு நேரத்தில் எந்த மனிதர்களும் வெளியே வருவதே இல்லை.

இது கூட ஒரு புதுமையான தண்டனை தான் என்று மக்களும் பேசிக்கொண்டார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *