சிறுகதை

தண்டனை | காசாங்காடு வீ. காசிநாதன்

தேவாலாயம் அருகே மக்கள் கூட்டமாக நிற்பதைக்கண்டு வெளியில் சென்று வந்த பாதிரியார் திகைத்தார்.

காரிலிருந்து இறங்கி அனைவரையும் அமைதி காக்க வேண்டினார்.

மேலே பார்த்தார்.

தேவாலாயத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சியில் மேலேயே நிற்கிறார் டேவிட்.

டேவிட் பன்னாட்டு நிறுவனத்தின் விற்பனை மேலாளர். அன்றாட நுகர்பொருள் பிரிவில் பணி. நல்ல பேச்சுத் திறமையோடு சாதுர்ய குணமுடையவர். தனது தொழில் தொடர்பாக நம்பும்படி பொய்களை வாரி வழங்குவார். வாயால் வடை சுடும் வல்லவர். 15 வருடங்களாக பணியாற்றி விற்பனையை முன்னோக்கி எடுத்துச் சென்று நிறுவனத்தில் இதற்கான பல விருதுகளையும் பெற்றவர்.

மார்க் அமோகியோ பகுதியில் அமைந்திருக்கும் தேவாலாயத்தின் தலைமைப் பாதிரியார். அன்பர்களின் பாவங்களுக்கு மன்னிப்புடன் ஆசியும் வழங்கி பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றவர்.

தனது 25 வயதில் திருச்சபையில் சேர்ந்து கடந்த 40 வருடங்களாக தொண்டாற்றிய நல்லவர். அதிர்ந்து கூட பேசமாட்டார். கனிவோடு பேசி அன்பர்களை தன்வசப்படுத்திவிடுவார். அவருடைய செயல்பாடுகள் பாதிரியாராகவே பிறந்தது போல இருக்கும்.

பாதிரியார் மார்க் தேவாலாயத்தின் மீது ஏறினார்.

டேவிட்டின் தோள்களை தொட்டு

“குழந்தாய்” உனது பிரச்சனை என்ன?

பேசி ஒரு முடிவுக்கு வரலாம்.அவசரம் வேண்டாம் என அன்புக் கட்டளையிட்டார்.

என்ன நடக்கும்? டேவிட்டிற்கு ஒன்றும் ஆகாது- கூட்டத்தினரின் பரிதவிப்பு.

டேவிட் கறாராக மறுத்தார்.

நான் நிறையப் பாவங்களை செய்தவன்.

பொதுமக்களிடம் தரமற்ற பொருட்களை காட்டி மிகச்சிறந்த உன்னதமானது என்று கூறி பேச்சிலேயே மயக்கி விற்றவன்.

குப்பையைக் காசாக்கியவன். சுமாரானவற்றை மிகச்சிறந்ததாக கூறினேன்.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலந்திருப்பதை மறைத்து லாப நோக்கையே முதன்மையாகக் கருதினேன்.

நான் செய்த குற்றங்கள் அதிகம். எனக்குத் தண்டனைதான் சரியான தீர்வு. என் மனச்சாட்சியின் முன் நான் ஒரு முழுக் குற்றவாளி.

என்னைத் தடுக்காதீர்கள். இது நான் நன்கு யோசித்தபின் எடுத்த முடிவு.

மகனே கவலை வேண்டாம், எனது கடந்தகால அனுபவத்தில் நிறைய பேர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கி அவர்களை நல்வழிப் படுத்திய அனுபவம் எனக்கு உண்டு. நாம் பேசலாம்- பாதிரியாரின் அனுபவ வார்த்தைகள் டேவிட்டைத் தாெட்டது.

தவறுகள் இயல்புதானே?

“நான் செய்த அனைத்தும் தப்பு”

“நீங்கள் மிகத்திறமையானவர்.”

இல்லை, “ஏமாற்றுக்காரன்”.

40 வயதுதானே? வாழ வேண்டியவர்!

பாவம் செய்தவன்! பண்பற்றவன்!!மக்களின் அறியாமையைத் திறமையாக கையாண்ட வித்தைக்காரன்!!!

பாதிரியார் இந்தத் தற்கொலையை எப்படியும் தடுத்து விடுவார் என்றே மக்கள் ஆரூடம் கூறினார்கள்.

.வேடிக்கை பார்க்க வந்தவரின் வேனிலிருந்து “தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்” என்ற பாடல் 96.8 ல் ஒலிக்கிறது.

பாதிரியார் தொடர்ந்து பேசுகிறார்,

டேவிட் சில நேரங்களில் எதிர்வாதம் செய்கிறார். சில நேரம் கோப பாவனை.

நீண்ட விவாதம் நடக்கிறது.! பாதிரியார் பேசுவதும் டேவிட் மறுப்பதுமாக,…

டேவிட் குதிக்கும் போது பாதிரியாரையும் இழுத்து விடுவாரோ?என்று பொதுமக்கள் கவலைப் படுகிறார்கள்.

திக்.. திக்.. திக் என்ற தருணம்.

பாதிரியார் தள்ளியே நிற்கிறார்!

ஏதோ பதற்றம்!!

டேவிட் குதித்து விடுகிறார்!!!

சில நொடிகளில் பாதிரியார் நான் உன்னைவிட மோசமானவன். வாழத்தகுதி அற்றவன் எனக் கூறிவிட்டுக் கீழே குதித்து விடுகிறார்.

பாதிரியார் இறுதியாகக் டேவிட்டிடம் கூறியது.

அவரின் மிகப்பரிய தப்பு..

சென்ற வாரம் சிறுமியை கற்பழித்தவனுக்கு பாவமன்னிப்பு வழங்கியதாகக் கூறியிருந்தார்.

கீழே தரையில் இருவரும் செத்துக் கிடந்தார்கள். பாவத்தின் சம்பளம் மரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *