செய்திகள்

தடை உத்தரவை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஊரடங்கு முடிந்த பின்னர்தான் திரும்ப வழங்கப்படும்

Spread the love

போலீசாருக்கு பழ ஜூஸ், முகக்கவசம், சானிடைசர்

தடை உத்தரவை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்

ஊரடங்கு முடிந்த பின்னர்தான் திரும்ப வழங்கப்படும்

கமிஷனர் ஏ.கே விஸ்வநாதன் பேட்டி

சென்னை, ஏப். 7–

144 தடையை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் ஊரடங்கு முடிந்த பின்னர்தான் திரும்ப வழங்க திட்டமிட்டிருப்பதாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியமேடு ரிப்பன் மாளிகை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு பழ ஜூஸ், முகக்கவசம் மற்றும் சானிடைசர் ஆகியவற்றை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விசுவநாதன் வழங்கினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘சென்னை ஏடிஜிபி சந்தீப்ராய் ரத்தோரின் மகன் ஆர்னவ் ரத்தோரின் ஆரண்யா அறக்கட்டளை சார்பாக 1லட்சம் பழச்சாறு பாக்கெட்டுக்கள் காவலர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவை அனைத்தும் காவலர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் சென்னை நகர ஆயுதப்படை காவலர்கள் இணைந்து தயாரித்த முககவசம் மற்றும் சானிடைசர்களும் காவலர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அத்தியாவசிய தேவைகள் என்று கூறிவிட்டு பொதுமக்கள் அடிக்கடி வெளியில் வாகனத்தில் சுற்றுகின்றனர். இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சென்னையில் தடையை மீறிய நபர்கள் மீது இதுவரை 30 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 12 ஆயிரம் வாகனங்களை ஊரடங்கு முடிந்த பின்பு வழங்க திட்டமிட்டுள்ளோம்.

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அறிகுறி தென்பட்டால் மட்டுமே மருத்துவ பரிசோதனை காவலர்களுக்கு எடுக்கப்படும் எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலர் குடியிருப்புகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.வீட்டில் தனியாக உள்ள முதியவர்கள் அத்தியாவசிய தேவைக்கு காவர்களை அணுகலாம். சட்ட விரோதமாக மதுபானம் விற்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையும் மீறி விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *