செய்திகள்

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களால் தான் கொரோனா வைரஸ் உருமாற்றம்

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்

புதுடில்லி, மார்ச் 22–

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாவர்களால்தான் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைவதாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதை பல மாநில அரசுகள் கட்டாயம் என அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பிலான வாதுரையில், கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களால்தான் வைரஸ் உருமாற்றம் அடைந்து கொண்டு வருவதாக நிபுணர்கள் ஆய்வு செய்து தெரிவித்துள்ளனர். எனவே தான் கோவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளோம். மேலும் தடுப்பூசியை கட்டாயமாக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது. மத்திய அரசு கூறியதையடுத்து தமிழகத்தில் 100 சதவிகிதம் மக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசு முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறு தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.