செய்திகள்

தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ரத்து

இஸ்லாமாபாத், ஜூன் 4–

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்கும்படி பாகிஸ்தானின் சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் கொரோனா தடுப்பு குழுவுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய, சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா, ‘பாகிஸ்தானில் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிந்து மாகாணத்தில், இதுவரை 15 லட்சத்து 50 ஆயிரத்து 553 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், ஒரு நாள் பாதிப்பு கடந்த ஒருவாரமாக 2 ஆயிரமாக உள்ளது. இதை மேலும் குறைக்க அனைவரும் தடுப்பூசி போட வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதைத் தவிர்த்து வரும் மாகாண அரசு ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்திவைக்கப்பட வேண்டும். அடுத்த மாதத்திலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வர வேண்டும்’ எனக் கூறினார். இந்த உத்தரவு மாகாண நிதி அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்காக, அனைத்து ஆசிரியர்களும் இம்மாதம் 5ம் தேதிக்குள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *