செய்திகள்

தடுப்பூசி குறித்த தகவலை அறிய ஆரோக்கிய சேது செயலியில் புதிய வசதி

புதுடெல்லி, ஜூன் 2–

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தங்களின் தகவல் குறித்து பதிவேற்றம் செய்வதற்கான புதிய வசதியை ஆரோக்கிய சேது செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

தடுப்பு மருந்து நிலைத் தகவல் குறித்து பதிவேற்றம் செய்யும் வசதி ஆரோக்கிய சேது செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்தின் முதல் டோசை போட்டவர்களுக்கு ஆரோக்கிய சேது செயலியின் முகப்பு பக்கத்தில் 1 நீல நிற டிக் குறி தோன்றும்.

தடுப்பு மருந்தை முழுமையாக பெற்றவர்களுடைய ஆரோக்கிய சேது செயலியின் முகப்பு பக்கத்தில் 2 நீல நிற டிக் குறிகள் தோன்றும். தடுப்பூசி பெற்றுக் கொண்டதை கோவின் தளம் மூலம் சரிபார்த்த பிறகு இரண்டாம் டோஸ் பெற்ற பின்னர் இது தோன்றும்.

மாற்றி அமைக்கப்பட்ட சுய மதிப்பீட்டை செய்யாத அனைத்து ஆரோக்கிய சேது பயனர்களுக்கும் தடுப்பு மருந்து நிலையை பதிவேற்றவும் என்ற விருப்பத்தேர்வு வழங்கப்படும். ஆரோக்கிய சேது செயலியில் சுயமதிப்பீடு செய்து கொண்டபிறகு, ஒரு டோஸ் தடுப்பு மருந்து பெற்றவர்களுக்கு, ஓரளவு “தடுப்பு மருந்து பெற்றுள்ளார் / தடுப்பு மருந்து பெற்றுள்ளார் (சரி பார்க்கப்படவில்லை)” என்று அவர்களது ஆரோக்கிய சேது செயலியின் முகப்பு பக்கத்தில் தோன்றும்.

சுய மதிப்பீட்டின் போது பயனர் அளித்த தடுப்பு மருந்து பெற்றுக்கொண்ட நிலை குறித்த தகவலின் அடிப்படையில் இது தோன்றும். சரி பார்க்கப்படாத இந்த நிலை, கோவின் தளத்தில் சரிபார்க்கப்பட்ட பின்னர் ஒருமுறை கடவுச் சொல்லின் அடிப்படையில் சரி பார்த்ததாக அறிவிக்கப்படும்.

கோவின் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட கைபேசியின் மூலம் தடுப்பு மருந்து பெற்றுக்கொண்ட நிலை பதிவேற்றம் செய்யப்படலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *