செய்திகள்

தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

தஞ்சாவூர். ஏப்.16-

சித்திரை பெருவிழாவினை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலின் ஐந்தாம் ஆண்டு தேர்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் தொடக்க காலம் முதல் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டன. அதில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடத்தப்பட்டு 15ம் நாள் திருதேரோட்டமும் நடைப்பெற்று வந்துள்ளது. இரண்டாம் மன்னர் சரபோஜி 5 பெரிய தேர்களை உருவாக்கி 4 ராஜ வீதிகளில் தேர் முட்டிகளை அமைத்து தந்தார். பிறகு 1801ம் ஆண்டு தேரின் சக்கரங்கள் புதுப்பிக்கப்பட்டுடுள்ளதாகவும் அதற்கு பிறகு ஆங்கிலேயர்கள் காலத்தில் தேரோட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் தேரோட்டம் நின்று போனது. இதனால் தேர் முற்றிலும் சிதிலமடைந்தது. புகழ் பெற்ற இக்கோயிலுக்கு தேர் இல்லாத குறையை போக்க 2013 ம் ஆண்டு ரூ 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 அடுக்காக 52 அடி உயரமும் 20 அடி அகலமும் 40 டன் எடையுடன் 165 மணிகள் மற்றும் 252 தெய்வங்களின் சிற்பங்களுடன் புதிய தேர் செய்யப்பட்டு ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 2015ம் ஆண்டு ஏப் 29ம் தேதி முதல் தேரோட்டம் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை திருவிழா ஐந்தாம் ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள் தோறும் பல்வேறு அபிஷேகங்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டும் இன்று நடைபெற்றது. இதையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட தியாகராஜர், கமலாம்பிகை, கந்தர் சிலையினை தேரில் வைத்து அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்பு தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். விழாவில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கெண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விழாவில் திருவாடுதுறை தம்பிரான் சுவாமிகள், அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், இந்து சமயஅறநிலையத் துறை இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் பரணிதரன், கண்காணிப்பாளர் ரெங்கராஜ் உள்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *