தன் தந்தை தணிகாசலத்திடம் ஒரு மாதமாக தனக்கு ஓர் அலைபேசி வாங்கிதரும்படி கேட்டுப் பார்த்தான் கார்த்திக். அவர் இதுவரை அவனுக்கு போன் வாங்கித்தரவில்லை அவனுக்குப் பெரும் வேதனையாக இருந்தது.
அவன் கல்லூரியில் முதலாமாண்டு படிப்பவன். அவன் தந்தை ஒரு பெரிய சிமிண்ட் கடை உரிமையாளர். வியாபாரம் நல்ல அமோகமாக நடைபெறுகிறது. வசதியான குடும்பம் . வீட்டில் கார்த்திக் மூன்றாவது செல்லபிள்ளை . அவனுடைய அண்ணனுக்கு மட்டும் உடனே புதிய ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்தவர் இவனுக்கு மட்டும் ஏன் வாங்கித்தரவில்லை?
கார்த்திக் குழம்பிய மனநிலையில் இருந்தான். கொஞ்ச காலமாக இதே சிந்தனையில் இருந்தவன்.
ஒரு நாள் தன் தாயிடம் கேட்டுப் பார்ப்போம் என்று முடிவெடுத்து சமையறையிலிருந்து அவனுடைய தாய் மங்களத்திடம் அம்மா எனக்கு ஸ்மார்ட் போனு வேனுமுன்னு அப்பாகிட்ட ஒரு மாதமா கேட்டுட்டு இருக்கேன். அப்பா எனக்கு போன் வாங்கித்தர மாட்டேங்கிறார்ம்மா என்று சோகத்துடன் கூறினான். இதைக் கேட்ட அவள் ஏன் இன்னும் உனக்கு போன் வாங்கித் தரலையா? சரி அப்பா வரட்டும் நானே கேட்கிறேன். ஆறுதல்வார்த்தை சொன்னாள்.
அப்பாவுக்கு போன் வாங்க நேரம் கிடைக்கலைன்னா பணத்தையாவது எங்கிட்ட கொடுக்க சொல்லுங்க. நான் கடைக்கு போயாவது வாங்கிக்கிறேன் என்றுக் கேட்டான். சரிப்பா அப்பா வரட்டும் உன் விசியத்தை பேசுறேன். நீ காலேஜுக்கு நேரமாச்சி. சீக்கிரம் கிளம்பு ” அவனை அனுப்பி வைத்தாள் மங்களம்.
மங்களத்தின் மனதில் ஏன் இந்த மனுஷன் நம் கார்த்திக்கு போன் வாங்கி தரவில்லை; மூத்தவனுக்கு வாங்கி தந்தவர் இவனுக்கு மட்டும் ஏன் இப்படி செய்கிறாரு. வீட்டுக்கு வரட்டும் கேட்டுக்கொள்வோம் என்று நினைத்தவளாய் மற்ற வேலையை பார்க்கத் தொடங்கினாள்.
இரவுஏழு மணி வீடு வந்து சேர்ந்தார் தணிகாசலம். வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். அப்போது பக்கத்துவீட்டு பையன் பாபு பேசி கொண்டிருப்பதை கவனித்தார். அவனும் கார்த்திக்கும் ஒரே பள்ளியில் படிப்பவர்கள் கார்த்திக் தந்தை வருவதை எதிர்பார்த்தவனாய் இருந்தவன்
அவரைப் பார்த்ததும் வாசல் வெளியிலேயே வழி மறித்தவனாய் அப்பா நான் உங்ககிட்ட ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுங்கப்பானு சொல்லிஒரு மாசமாச்சி இன்னும் வாங்கி தரமாட்ரீங்களே எப்பதான் வாங்கி தருவீங்க?
மகன் இப்படி கேட்பான் என்று எதிர்பார்த்தவர் இப்ப என்னப்பா அவசரம் கொஞ்சம் பொறுப்பா உனக்கு போன் வாங்கி தரேன் என்ற படி தணிகாசலம் கார்த்திக்குடன் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கல்லூரி வகுப்பு மாணவன் பாபுவை பார்த்தான் ; அவன் மௌனமாய் நின்றிருந்தான்.
கார்த்தியிடம் பேசியபடி தனது காலணியை கழட்டியபடி வீட்டுக்குள் நூழைந்தார் கார்த்திக் . அவரைப் பின் தொடர்ந்து வீட்டினுள் சென்றான் அப்பா. பணத்தை என்னிடமாவது கொடுங்கள் ; நானாவது போன் வாங்கிக்கிறேன் என்று அவரை மறுபடியும் வற்புறுத்திக்கேட்டான்
டேய் … கார்த்திக் உனக்கு நிச்சயம் போன் வாங்கி தருவேன் என்றவாறே சோபாவில் அமர்ந்தார்
போங்கப்பா நீங்க… என் மேல பாசமே இல்லை; அண்ண்ன் கிட்ட தான் பாசமா இருக்கீங்க என்று அழாத குறையாய் புலம்பினான்.
தந்தையும் மகனும் பேசியதை கேட்டபடி மங்களம் அவரிடம் ஏங்க நம்ம பையன கார்த்திக்கு ஒரு போன் வாங்கிக் கொடுத்தாதான் என்ன அவன உங்ககிட்ட ஒரு மாசமா கேட்குறானே.
மங்களம் நான் இவனுக்கு போன் வாங்கித் தர மாட்டேன்னா சொன்னேன். பல வேலையில மறந்துட்டேன் என்று விளக்கம் சொன்னார்.
உடனே கார்த்திக் அண்ணனுக்கு போன் வாங்குறதுக்கு எல்லாம் ஞாபகம் வந்தது . எனக்கு மட்டும் வரலையா என்று கோபத்துடன் கேட்டான் .
அதற்கு ஏண்டா இப்படி ஓயாம நச்சரிக்கிறே உனக்கு நிச்சயம் போன் வாங்கி தருவேன் என்ன நம்புடா
சரிப்பா கார்த்திக் .
அப்பா தான் சொல்றாருயில்ல கொஞ்சம் பொறுஅவனை சமாதானப்படுத்தனாள் அம்மா.
ஆனால் ஆவனோ எனக்கு போன் வேண்டாம் ; ஒன்னும் வேண்டாம் கூறியபடி வெளியே சென்றான். மங்களத்திற்கு ஒன்றும் புரியவில்லை . தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் அலைபேசி யுத்தத்தை எண்ணி அவள் குழம்பிப் போனாள். கணவருக்கு காப்பி போட சமையலறைக்குள் சென்றாள்.
மறுநாள் காலைப் பொழுது
வீட்டில் கார்த்திக் இல்லை தணிகாசலம் சோபாவில் அமர்ந்து கொண்டு வழக்கம் போல் செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு மங்கலம் காப்பி போட்டு வந்து கொடுத்தாள். என்ன மங்களம் கார்த்திகை வீட்டில் காணோம். எங்கே போனான் ?என்று கேட்டார்
மங்களம் அவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு கார்த்திக் சீக்கிரமா எழுந்து வெளியே போனான். நான் எங்கடா வெளியே போறேன்னு கேட்டதுக்கு அப்பா எனக்கு போன் வாங்கி தர மாட்டேன்கிறாரு. அதனால நான் இன்னைக்கு காலேஜுக்கு போக மாட்டேன்னு கோபத்தில் சொல்லிட்டு போறான்.
இதைக் கேட்டதும் தணிகாசலம் அதிர்ச்சியானார்; என்னது காலேஜுக்கு போக மாட்டேன்னு சொன்னானா ?
எல்லாம் உங்களால தான்; அவனுக்கு ஒரு போன் வாங்கி தந்திருக்கலாமுள்ள என்று அவரை பார்த்து வினாவினாள்
அம்மா.
இப்ப அவன் எங்கே போயிருக்கான் ஒரு இடத்துக்கு போயிட்டு வந்திடுறேன் சொல்லிட்டு போறான் .
என்ன மங்களம் அவன் வெளியே போறப்ப என்கிட்ட சொல்லிட்டு இருக்கலாமில்லையா எனக்கேட்டார்.
அதற்கு மங்களம் நீங்க தூங்கிட்டு இருந்தீங்க. அதனால உங்கள நான் எழுப்பல
போன் வாங்கித் தரலைன்னா காலேஜுக்கு போக மாட்டானா?
நீங்க போன் விஷயத்துல ரொம்ப பிடிவாதம் காட்டினீங்க; அவனும் பிடிவாதமா இருக்கான்.
இதைக் கேட்ட கணவர் தணிகாசலம் ஆமா மங்களம் இதுக்கெல்லாம் காரணம் நான் தான். அவனுக்கு அவன் கேட்டவுடனே ஒரு போனை வாங்கி கொடுத்திருந்தா இப்படி வீட்டை விட்டு ஓடி இருக்க மாட்டானா?
அப்புறம் ஏங்க அவனுக்கு போன் வாங்கித் தராம பிடிவாதம் பண்ணீங்க என்று அவரை உலுக்க …
பிறகு தணிகாசலம் பேச ஆரம்பித்தார்
நம்ம கார்த்திக் கோட சேர்ந்து படிக்கிற பக்கத்து வீட்டு பையன் பாபு அவங்க அப்பா கிட்ட அடிக்கடி போன் கேட்டு தொந்தரவு செஞ்சான் அவனோட அப்பா
கூலி வேலைக்கு போறதுனால அவரால அவன் மகனுக்கு போன் வாங்கி தர முடியல ; ஒரு தடவை அந்தப் பையன் போன் கேட்டு தொந்தரவு செஞ்சான்; உடனே கோபப்பட்டு பாபுவை கண்ணா பின்னான்னு அடிச்சுட்டாரு.
நாமெல்லாம் கூலி வேலைக்காரங்க நாம படிக்கிறதே பெரிய விஷயம் ; இதுல ஆடம்பர பொருளுக்கு ஆசைப்படக் கூடாது; நீ நல்லா படிச்சு வேலைக்கு போன பிறகு போன் வாங்கிக்கலாம்னு சொன்னாரு. அந்த ஏழை வீட்டு பையனை பக்கத்துல வச்சிக்கிட்டே நம் மகன் கார்த்திக் போன் கேட்டதுனால அவன் மனசு பாதிப்பு ஏற்படக்கூடாது அப்படின்னு நினைச்சு போன் வாங்கித் தர விஷயத்துல தாமதப்படுத்தினேன். அந்த ஏழை வீட்டு பையன் பாபு நம்ம வீட்டு பையனுக்கு போன் வாங்கி கொடுத்த விஷயம் தெரிஞ்சா அவன் எவ்வளவு தூரம் அவனுக்கு தாழ்வான உணர்வு ஏற்படும். அதனால தான் நம் மகனுக்கு போன் உடனே வாங்கி தர முடியல மங்களம்.
அவர் பேசியதை பக்கத்தில் குடியிருக்கும் கார்த்திக்வுடன் படிக்கும் மாணவன் பாபு ஜன்னல் வழியே கேட்டுவிட்டு ஓவென அழுதபடி வேகமாக கார்த்திக் வீட்டினுள் வந்து தணிகாசலம் காலில் விழுந்து ஐயா என்னை மன்னிச்சிடுங்க ஐயா நீங்க வசதி இருந்தும் வசதி இல்லாத எனக்காக உங்க மகனுக்கு போன் வாங்கி தர முடியாத இக்கட்டான நிலையை நான் உருவாக்கிட்டேனே என்று கண்ணீர் மல்க கூறினான்.
உடனே தணிகாசலம் தம்பி எழுந்திடுப்பா நீயும் எனக்கு பிள்ளை மாதிரி தான் ; பாவம் நீ என்ன செய்வ என்றபடி அவனை தூக்கினார்.
இல்லைங்க ஐயா நீங்க பெரிய மனசுக்காரர் ஐயா. அவங்க அவங்க வசதியை வச்சி மத்தவங்கல பத்திகவலைப்படாம ஆடம்பரமான வாழுற இந்த காலத்துல நம்ம ஆடம்பரம் மத்தவங்கள பாதிக்க கூடாது நினைக்கிறீங்க. நீங்க உள்ளத்தால் உயர்ந்தவர்ங்கய்யா. என்றபடி தன் வயதுக்கு மீறி மனப்பக்குவம் கொண்டு பேசினான்.
பிறகு கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி நீங்க ரொம்ப தங்கமான மனசுக்காரர். நம்ம கார்த்திக்க நானும் போய் தேடி வரேன் என்று கூறி முடிப்பதற்குள் வெளியில் இருந்து அப்பா என்று குரல் கேட்டது. குரல்வந்த திசையை நோக்கி தணிகாசலம் வெளியே சென்று பார்த்தார் அங்கே கார்த்திக் நின்று கொண்டிருந்ததை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார். அவரின் முகத்தில் சோகம் படர்வதை பார்த்தான் கார்த்திக் .
‘‘அப்பா என்னை மன்னிச்சிடுங்க. அப்பா உங்கள சரியா புரிஞ்சுக்காம இப்படி நடந்துட்டேன். நீங்க என்னுடைய பிரண்ட் பக்கத்து வீட்டு பையனுக்காக அவன் மனசு நோக கூடாதுன்னு ரொம்ப கஷ்டப்பட்டீங்கப்பா. உண்மையிலேயே நீங்க கிரேட் பா என்றபடி தன்னுடைய அப்பாவை கட்டிப்பிடித்து கொண்டான்.
கார்த்திக் உன்னுடைய பிரண்டு பாபு எனக்கும் பையன் தான். அவனுக்கும் சேர்த்து உனக்கும் போன் வாங்கி தரேன்; சரியா. வாங்க இப்பவே கடைக்குப் போவோம் என்றார்.
பாபு தயங்கியபடி அவரை ஆச்சரியமாக பார்க்க அவனையும் தணிகாசலம் சேர்த்து அணைத்து கொண்டார்.