சென்னை, ஏப். 7–
தங்கம் விலை 3வது நாளாக சரிவை சந்தித்துள்ளது. சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.66,280-க்கு விற்பனையானது
தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்தை கடந்து தொடர்ந்து உச்சம் தொட்டு வந்தது.
தற்போது தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 3-ந்தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8 ஆயிரத்து 560க்கும், சவரன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது. 4–ந் தேதி சவரனுக்கு ரூ.1,280ம், 5-ம் தேதி சவரனுக்கு ரூ.720 என தங்கம் விலை குறைந்தது. 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,000 வரை சரிந்தது.
இந்த நிலையில் இன்றும் 3 நாளாக தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.66,280க்கும், கிராமுக்கு ரூ.24 குறைந்து, ரூ.8,285க்கும் விற்பனை ஆகிறது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,03,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலக அளவில் தங்கத்துக்கு டிமாண்ட் அதிகம் உள்ளது. அதன் காரணமாக சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப அதன் விலை ஏற்ற இறக்குத்துடன் இருப்பது வழக்கம். இருப்பினும் இந்தியாவில் சமீப காலமாக வரலாறு காணாத வகையில் புதிய விலை உச்சத்தை எட்டியது தங்கம். இதற்கு உலக நாடுகளிடையே நிலவும் வர்த்தக ரீதியான தாக்கமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
சமீபத்தில் பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப், உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்தார். அதேபோல பல்வேறு நாடுகள் தங்கத்தின் மீதான முதலீட்டை திரும்பப் பெறுவது போன்ற காரணங்களால் தற்போது தங்கம் விலை குறைந்துள்ளது.
4-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒரு கிராம் தங்கம் ரூ.160 குறைந்து, ரூ.8 ஆயிரத்து 400-க்கும், ஒரு பவுன் ரூ.1,280 குறைந்து ரூ.67 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. 5-ம் தேதி வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480 விற்பனையானது. கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8,310-க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், இன்று 3-வது நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது. அதன்படி, பவுனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.66,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25க்கு குறைந்து ரூ.8,285க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.